தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் தற்பொழுது புதிதாக உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன்.இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கின்றார்.இந்தத் திரைப்படத்தை யோகி பாபு நடித்த மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார்.இவர் மண்டேலா திரைப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.பிரபல இயக்குனர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார்.பரத் சங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு டாக்டர்,டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக இருந்தாலும் இதனைத் தொடர்ந்து வெளியான பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு தோல்வியை அடைந்தது.இதனால் இவர் தற்பொழுது நடித்து வரும் கதைகளை மிகவும் நன்றாக கவனித்து தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
மாவீரன் திரைப்படம் ஒரு பேண்டஸி திரைப்படம் ஆகும்.இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கார்டூன் லிஸ்ட் ஆக நடித்துள்ளார்.மாவீரன் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.இந்தத் திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை செட் செயின் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது.
இந்தத் திரைப்படத்தின் வெளியிடை இன்னும் இரண்டு வாரங்களை இருப்பதால் இந்த திரைப்படத்தின் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கின்றது.அதிலிருந்து சீனு சீனு என்ற பாடலை அனிருத் பாடி இருக்கின்றார்.அதனைப் போல் இரண்டாவதாக வெளிவந்த வண்ணாரப்பேட்டையில் பாடலை சிவகார்த்திகேயனும் அனிருத் இணைந்து பாடி இருக்கின்றார்கள்.இந்த இரண்டு பாடல்களுமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ஆக இந்த திரைப்படத்தின் டிரைலரை பட குழு என்றும் வெளியிட இருக்கிறது.இந்தத் திரைப்படத்தின் டிரைலர் மாஸாக இருக்கும்.இந்தத் திரைப்படத்தின் டிரைலர் யூட்யூபில் செம வைரலாகி வருகின்றது.இந்த ட்ரெய்லருக்கு லைக்குகளும் குவிந்த வண்ணமாக இருக்கிறது ட்ரெய்லர் செம்ம மாஸாக இருப்பதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.