நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். கடந்தாண்டி இவர் நடித்த டான் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.பிரின்ஸ் திரைப்படம் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் வெற்றியடையாமல் தோல்வியை அடைந்தது இந்த தோல்வியை சரி கட்டுவதற்காக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதித்தி சங்கர் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மாவீரன் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு இன்று திரையில் வெளியிடப்பட்டது. மிஷ்கின் வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்வியை சரி கட்டுவதற்கு சரியான படம் என்று கூறி வருகிறார்கள்.சிவகார்த்திகேயன் நடிப்பும்,கேமரா ஆங்கில் மற்றும் மேக்கிங் சரியாக அமைந்ததால் இந்த திரைப்படம் நல்லா இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.