நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக இருந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு டான் என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இனிமேல் நமக்கு வெற்றி தான் என்று பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையை சிவகார்த்திகேயன் வைத்திருந்தார் சிவகார்த்திகேயனின் நம்பிக்கை உடைக்கும் வகையில் இந்த திரைப்படம் படம் தோல்வியை அடைந்தது.
இந்த தோல்வியிலிருந்து வெளிவருவதற்காக இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். மாவீரன் படம் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு திரையில் வெளியிடப்பட்டது.
மாவீரன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மீண்டு வந்து விட்டார் என்று சொல்லும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாக அனைத்து ரசிகர்களும் சொல்லி வந்தனர்.
இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் முதல் நாள் மட்டும் ஒட்டுமொத்தமாக 18 கோடி வசூல் செய்து இருப்பதாகவும் அதில் தமிழில் மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.