மயில் கனவில் வந்தால் என்ன பலன் | Mayil Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.அப்படி கனவில் பறவைகள் அதாவது மயில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மயில் கனவில் வந்தால் என்ன பலன்
மயில் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நல்லது நடக்கும். இளமையாக நீண்ட ஆயுள் வரை இருப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வெள்ளை மயில் கனவில் வந்தால் என்ன பலன்
வெள்ளை மயில் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு இது ஒரு நல்ல கணமாக இருக்கிறது இறைவனின் அருள் நேரடியாக உங்களுக்கு கிடைக்கிறது.நீங்கள் திட்டங்களை தீட்டி வைத்திருந்தீர்கள் என்றால் அந்த திட்டங்களை பிறரிடம் சொல்லும் பொழுது நன்கு யோசித்து அதன் பிறகு தான் அவர்களிடம் சொல்ல வேண்டும்.
கருப்பு மயில் கனவில் வந்தால்
கருப்பு மயில் கனவில் வந்தால் உங்களின் வளர்ச்சி பிடிக்காமல் பிறர் உங்கள் மீது பொறாமை பெற்று உங்களைப் பற்றி தவறாக வதந்திகளை பரப்புவார்கள்.
கோழி கனவில் வந்தால் என்ன பலன் |
கத்தரிப்பூ கலர் மயில் கனவில் வந்தால்
கத்திரிப்பூ கலர் மயில் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு இது ஒரு நல்ல கனவாகும். கனவு காண்பவரின் செல்வ வளங்கள் அதிகரிப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது. எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும்.
பறக்கும் மயில் கனவில் வந்தால்
பறக்கும் மயில் கனவில் வந்தால் கனவு காண்பவரின் கோபத்தினால் வெற்றிகள் கிடைக்காது என்று இந்த கனவு உணர்த்துகிறது.
மயில் நடனம் ஆடுவது போல் கனவில் வந்தால்
மயில் நடனம் ஆடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இது ஒரு நல்ல கனவு மற்றும் எச்சரிக்கைக்காக இருக்கிறது. நீங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பெற்ற வெற்றி உங்களின் எதிரிகளுக்கு பிடிக்காது அதனால் கவனமுடன் செயல் பட வேண்டும்.
மயில் துரத்துவது போல் கனவில் வந்தால்
மயில் துரத்துவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஒரு சில திட்டங்களை போட்டு அதில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள்.ஒரு சிலர் உங்களின் திட்டங்களில் தோல்வி அடைய வேண்டும் என்று உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள் அதனால் கவனத்துடன் உங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன் |
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் |
புலி கனவில் வந்தால் என்ன பலன் |