மீன் கனவில் வந்தால் என்ன பலன்| Meen kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.கனவில் மீன் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மீன் கனவில் வந்தால் என்ன பலன்
மீன் கனவில் வந்தால் கனவு காண்பவரின் உடல்நிலை நல்ல ஆரோக்கியமாக இருக்கும். பண வரவுகள் அதிகரித்து செல்வ வளங்களுடன் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிறிய மீன் கனவில் வந்தால்
சிறிய மீன் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வாழ்வில் வரும்.அதாவது வெளியே செல்லும் பொழுது சிறிய தடங்கல் ஏற்படும்.
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் |
பெரிய மீன் கனவில் வந்தால்
பெரிய மீன் கனவில் வந்தால் வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தோசமான விஷயம் வரும். அதாவது நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
நிறைய மீன் கனவில் வந்தால்
நிறைய மீன் கனவில் வந்தால் கனவு காண்பவர் குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் பாசத்தை உணர்த்துகிறது. அது மட்டுமில்லாமல் குடும்பத்தினரும் உங்கள் மீது அதிக அளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று உணர்த்துகிறது.
மீன் தண்ணீரில் இருப்பது போல் கனவில் வந்தால்
மீன் தண்ணீரில் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் கிடைக்கும். அதாவது வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அங்கு உங்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல லாபம் கிடைக்கும்.
இறந்த மீன் கனவில் வந்தால்
இறந்த மீன் கனவில் வந்தால் கனவு காண்பவர் கவனமாக இருக்க வேண்டும் அதாவது கனவு காண்பவருக்கு ஏமாற்றங்கள் மனக்குழப்பங்கள் மற்றும் உடல் நல குறைபாடுகள் ஏற்படும் இதனால் கனவு காண்பவர் கவனமாக செயல்பட வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன் |
மண் கனவில் வந்தால் என்ன பலன் |
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |