மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடர் 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழ் மொழி தொலைக்காட்சி தொடராகும்.இது தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் டிஜிட்டல் தளமான zee5 ஒளிபரப்பப்படுகிறது.இந்த தொடர் ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.இந்தத் தொடரில் ஸ்ரீரஞ்சனி சௌந்தர்யா ரெட்டி மற்றும் ஆரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.அது மட்டும் இல்லாமல் இந்த தொடரை தெலுங்கு மொழியில் ராதம்மா குத்துருவின் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பஞ்சாயத்தில் என்னிடம் தான் நகைகள் இருக்கின்றது என்று கொண்டு வந்து கொடுக்கும் மீனாட்சி.இதனை கோவில் பூசாரி தான் கொடுத்து வைக்க சொன்னதாக கூறி வருகின்றார் மீனாட்சி.ஆனால் அதனை பூசாரி நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று பழியை மீனாட்சியின் மேல் போட்டு வருகிறார்.இதனால் அனைவரும் மீனாட்சி திருடி என்று நினைத்து விடுகிறார்கள்.மீனாட்சி உண்மையை நிரூபிக்கும் வரை நான் சாப்பிட மாட்டேன் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று சொல்கிறாள்.
அதன் பிறகு மீனாட்சிக்கு திருட்டு பட்டம் கட்டி விட்டதால் ஊர் மரியாதை பரிவட்டம் புஷ்பா தனக்கு தான் என்ற ஊர் காரர்களிடம் சொல்லி விட ஊர்காரர்களும் ஒத்துக் கொள்கின்றனர்.ஆனால் சாந்தா மீது கோரக்காலி வந்து ஆடி யார் உண்மையான திருடன் என்று கண்டுபிடிக்கட்டும் என்று சொல்ல ஊர்காரர்கள் அனைவரும் அந்த சாமி மிகவும் கோரமான சாமி என்று கூறுகிறார்கள்.பிறகு மீனாட்சியும் ஒத்துக்கொள்கிறாள்.
அம்மாவின் மீது விழுந்த திருட்டுப் பலியை எப்படியாவது பார்க்க வேண்டும் யோசித்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்று பரபரப்புடன் இன்றைய எபிசொட்டில் நிறைவடைந்து இருக்கிறது.