எம்ஜிஆர் வரலாறு | MGR History In Tamil
வணக்கம் நண்பர்களே எம்ஜிஆர் என்பவரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு திரைப்படத்துறையிடம் மற்றும் அரசியலும் பல சாதனைகளை படைத்தவர்.எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழக மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்துள்ளார்.
எம்ஜிஆர் பிறப்பு
எம்ஜிஆர் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 மேலக்காடு கோபால மேனன்,சத்தியபாமா தம்பதியினருக்கு 5 மகனாக இலங்கையில் பிறந்தார்.
எம்ஜிஆர் திருமணம்
எம்ஜிஆர் முதலில் தங்கமணி என்பவரை மணந்தார்.எம்ஜிஆர் முதல் மனைவி தங்கமணிக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்தது அதன் பின்னர் தங்கமணியும் உடல் நலக்குறைவினால் இறந்தார். எம்ஜிஆர் சதானந்தவதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவருக்கும் குழந்தைகள் இல்லை பின்னர் நோய் காரணமாக சதானந்தவதி இறந்து விட்டார்.
ராஜா முக்கி படத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த ஜானகியின் மீது காதல் வசப்பட்டு அவரை மூணாவது திருமணம் செய்து கொண்டார் இவருக்கும் குழந்தைகள் எதுவும் இல்லை.
எம்ஜிஆர் திரைப்பட வாழ்க்கை
எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார்.இருந்தாலும் 1947 ஆம் ஆண்டு இவர் நடித்த ராஜகுமாரி என்ற திரைப்படம் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது இதைத்தொடர்ந்து 25 ஆண்டுகள் தமிழ் திரைப்படத் துறையில் முக்கியமானவராக திகழ்ந்து வந்தார்.
இவருடன் நடித்த சகா நடிகர் எம் ஆர் ராதாவினால் சுடப்பட்டு தெளிவாக பேசும் திறனை இழந்தார்.அப்பொழுதும் நடிப்பை கைவிடாமல் நடித்துக் கொண்டே இருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு இவர் நடித்த காவல்காரன் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இவர் நடித்த ரிக்சாக்காரன் என்னும் படம் தமிழகத்தில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 முதல் 150 நாட்கள் ஓடி வசூலை குவித்தது.
எம்ஜிஆர் நடிப்பில் மட்டும் சிறந்து விளங்காமல் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் சிறந்து விளங்கினார். எம்ஜிஆர் தயாரிப்பில் நாடோடி மன்னன்,அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற மூன்று திரைப்படங்களை தயாரித்து உள்ளார். இது மட்டுமல்லாமல் நாடோடி மன்னன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
எம் ஜி ஆர் க்கு 1971 ஆம் ஆண்டு அகில இந்திய சிறந்த நடிகருக்கான மத்திய அரசு வழங்கும் பாரத் விருது எம் ஜி ஆர் க்கு வழங்கப்பட்டது.எம்ஜிஆர் கடைசியாக நடித்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும்.எம்ஜிஆர் ஒட்டுமொத்தமாக 136 திரைப்படங்கள் நடித்துள்ளார்.
Read Also:
ரஜினி வாழ்க்கை வரலாறு |
எம்ஜிஆர் வரலாறு
எம்ஜிஆர் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 மேலக்காடு கோபால மேனன்,சத்தியபாமா தம்பதியினருக்கு 5 மகனாக இலங்கையில் பிறந்தார்.இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தந்தையின் மறைவுக்கு பின்னர் அவரது ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்காவும் இலங்கையில் தொடர்ந்து இறந்து விட மனவேறுப்புடன் எம்ஜிஆர் அம்மா சத்தியபாமா தனது இரண்டு பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து வெளியேறி சத்தியபாமா தனது தாயாருடன் கேரளாவில் வசித்து வந்தார்.
அங்கு சத்தியபாமாவின் தாயார் சரஸ்வதி இறந்தவுடன் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தனது தம்பியின் நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் கூடிய ஏறினார். எம்ஜிஆர் தனது குடும்ப சூழ்நிலைகளால் படிப்பை தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்க தொடங்கினார். நாடகங்களில் நன்கு நடித்த அனுபவம் பெற்று திரைப்பட துறைக்கு சென்றார்.
திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்பின் காரணமாக சிறந்த நடிகராக ஆனார். எம்ஜிஆர் மக்கள் மனதினை கவர்ந்தார். நடிப்பில் மட்டும் சிறந்த விளங்காமல் படங்களை தயாரிப்பது இயக்குவது என திரைப்படத் துறையில் சிறந்து விளங்கினார்.தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ கட்சியில் சேர்ந்தார்.
எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை
எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மு.கருணாநிதியுடன் நட்பாக இருந்தார்.
சி என் அண்ணா துறையின் மறைவுக்குப் பின் மு.கருணாநிதி முதலமைச்சரானதை தொடர்ந்து கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் ஏற்பட்ட சில சம்பவங்களால் எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அவரது தொண்டர் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் ஆரம்பித்தார்.எம்ஜிஆர் அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து பின்னர் அந்த கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.
சிறிது காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக பெயர் மாறியது. எம்ஜிஆர் முதல் முதலாக திண்டுக்கல் பகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திரைப்படத்தின் மூலம் அவர் அடைந்த புகழின் காரணமாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கடுமையாக நோய்வாய் பட்டு இருந்த பொழுதிலும் எந்த ஒரு தேர்தல் பிரசாதத்திற்கு வராமலே முதலமைச்சரான ஒரு முதலமைச்சராக எம்ஜிஆர் திகழ்ந்தார். தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த எம் ஜி ஆர் 1987 ஆம் ஆண்டு காலமானார்.
எம்ஜிஆரின் மறைவுக்கு பின்பு எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெ ஜெயலலிதா க்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவி பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது.
எம்ஜிஆர் நலத்திட்டங்கள்
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பல நலத்திட்டங்கள் செய்துள்ளார்.எம்ஜிஆர் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.எம்ஜிஆர் பள்ளியில் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்துவதற்கு இலவச சத்துணவு திட்டம்,இலவச சீருடை வழங்கும் திட்டம்,இலவச காலணி வழங்க திட்டம்,இலவச பற்பொடி வழங்கும் திட்டம்,இலவச பாடநூல் வழங்கும் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தினார்.
பெண்களுக்காக விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி,மகளிருக்கு சேவை நிலையங்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்,தாய் சேய் நல இல்லங்கள் என பல திட்டங்களை செயல்படுத்தினார்.தமிழக மக்களுக்கு வறட்சி காலத்தில் பயன்படும் வகையில் லாரிகளில் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டங்களையும் செயல்படுத்தினார்.
எம்ஜிஆர் இறப்பு
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உடல் நலக்குறைவால் டிசம்பர் 24,1987 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். எம்ஜிஆர் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. பல நல்ல திட்டங்களை செய்த எம்ஜிஆரை போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அவரை அடக்கம் செய்த இடத்தில் எம்ஜிஆர் நினைவிடம் கட்டப்பட்டது.
மேலும் தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் கட்டுரைகளை படிக்க
பெரியார் வாழ்க்கை வரலாறு |
பாரதியார் பற்றிய முழு விவரம் |
ராமானுஜர் வரலாறு தமிழில் |