Mokka Jokes in Tamil | தமிழ் ஜோக்ஸ் | Kadi jokes in Tamil
வணக்கம் நண்பர்களே நம் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து பேசுவது வழக்கமான ஒன்றாகும் அப்படி பேசும் பொழுது ஜோக் இல்லாமல் பேசினால் போர் அடிப்பது போல் இருக்கும். நம் நண்பர்கள் குழுவில் யாராவது ஒருவர் மொக்கையாக ஜோக் சொல்வார்கள் அதைக் கேட்டு அவர்களை திட்டுவோம் அல்லது இந்த மாதிரி மொக்க ஜோக் எல்லாம் சொல்லாத என்று கூறுவோம்.
Mokka Jokes In Tamil
நண்பர்கள் குழுவாக பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் மொக்கையாக ஜோக் சொல்வார் அப்பொழுது நமக்கு இவனுக்கு மட்டும் எங்கிருந்து இது போல் மொக்கையாக ஜோக் கிடைக்கிறது.என்று யோசிப்போம் நீங்களும் உங்கள் நண்பர்களிடம் பேசும் பொழுது மொக்கையாக ஜோக் சொல்ல வேண்டும் என நினைப்பீர்கள்.
அதற்காக நாங்கள் கீழே மொக்கையாக ஜோக்குகளை தயார் செய்து கொடுத்துள்ளோம் இதை படித்துவிட்டு உங்கள் நண்பர்களிடம் நீங்களும் மொக்கையாக ஜோக் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.
Kadi jokes in Tamil – தமிழ் கடி ஜோக்ஸ்
Read Also
A Jokes in Tamil-ஏ ஜோக்ஸ் |
Mokka Jokes In Tamil With Answers
நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு மொக்கை ஜோக் சொல்வோம். அதற்கான விடையே நாம் சொல்லவில்லை என்றால் நம் நண்பர்கள் நம்மளை கேலி செய்து பேசுவார்கள் அதனால் ஒரு மொக்கை ஜோக் சொல்ல வேண்டும் என்றால் அதற்கான விடையை தெரிந்து கொண்டு தான் சொல்ல வேண்டும்.
சரி அந்த மொக்க ஜோக் மற்றும் விடை எங்கு கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். நாங்கள் மொக்கை ஜோக் மற்றும் விடையும் கீழே கொடுத்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள மொக்கை ஜோக்கை படித்துவிட்டு அதற்கான விடையும் தெரிந்து கொண்டு வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
விடை:ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்
வரலாறு ஏன்டா உனக்கு பிடிக்காதுன்னு சொல்ற?
விடை:நான் “விஜய்”யோட ரசிகன்!
ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?
விடை:ஈரமாகும்
எல்லா கிளியும் பறக்கும், ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?
விடை:சங்கிலி
Costlyஆன கிழமை எது?
விடை:“வெள்ளி” கிழமை
வேலைக்கு போற விலங்கு எது?
விடை:பனி கரடி
50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!
விடை:“அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!
வெளியில மழை பெஞ்சா நீ ஏன் கையில் தாயத்து கட்டி இருக்க?
விடை:“பேய்” மழையா இருக்கே அதான்
பல் வலிக்கு முக்கியமான காரணம் எது?
விடை:பல் தான்
கல்யாண வீட்ல ஏன் வாழை மரம் கட்றாங்க?
விடை:கட்டலன கீழ விழுந்திடும் அதனால
2050-ல உலகம் எப்படி இருக்கும்?
விடை:உருண்டையா தான் இருக்கு
என்னடா வாயிலையும், கால்லையும் காயம்
விடை:“வாய்க்கால்”ல விழுந்துட்டேன்
நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
விடை:நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
விடை:அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்
தூங்கும்போது கையில ஸ்கேல் எதுக்கு?
விடை:டாக்டர் தான் “அளவோடு” தூங்கச் சொன்னார்
Mokka Jokes In Tamil Images
Mokka Jokes Tamil
Mokka Jokes Questions And Answers
இதையும் படியுங்கள்
தமிழ் நகைச்சுவை விடுகதைகள் |
Kadi Jokes in Tamil With Answers | கடிஜோக்ஸ் |