முள்ளங்கி நன்மைகள் | Mullangi Benefits in Tamil
Mullangi Benefits In Tamil
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகும் இந்த முள்ளங்கி மண்ணுக்கு கீழே விளையக்கூடிய காய்கறி வகைகளில் ஒன்றாகும். முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மற்றும் குடல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது இது பசியின்மை காச்சல் தொண்டை வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது முள்ளங்கியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது இது மட்டும் இன்றி முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகள் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது முள்ளங்கியின் நன்மைகள் மற்றும் தீமைகளை தெளிவாக கீழே கொடுத்துள்ளோம் தெரிந்து கொள்ளுங்கள்.
முள்ளங்கி என்றால் என்ன
முள்ளங்கி பிராசிகா வகையில் கீழ் வரும் குடும்பத்தின் காய்கறி ஆகும் இது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் விளையப்படுகிறது. சிலர் இந்த முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுகின்றனர்.அது மட்டும் இன்றி பல உணவு முறைகளில் முள்ளங்கி பயன்படுத்தப்படுகிறது முள்ளங்கி இலைகளும் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது அதனால் அந்த இலையும் சமைத்து மக்கள் பெரும்பாலாக சாப்பிட்டு வருகிறார்கள்.
முள்ளங்கி மருத்துவ குணங்கள்
சிறுநீரக நோய்களை குணமாக்கும்
சிறுநீரக நோய்களால் அவதிப்படுவோர் முள்ளங்கியை பொறியலாக அல்லது கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் சரியாகிவிடும்.குறிப்பாக சிறுநீரக கற்கள் சம்பந்தமாக இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கியை ஜூஸாக குடித்து வந்தால் சரியாகிவிடும் .
அனீமியா நோயை தடுக்கும்
ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக உள்ள காரணத்தினால் உண்டாகும் அனீமியா நோயை குணமாக்கும் திறன் இந்த முள்ளங்கிக்கு உள்ளது முள்ளங்கியில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உருவாக்கும் மற்றும் சிவப்பு அணுக்கள் சேதப்படுவதை தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இந்த முள்ளங்கியில் அதிக அளவு இருக்கிறது இதனால் வைரஸ் மற்றும் கிருமிகளிடமிருந்து நம்மளை பாதுகாக்கும் இந்த முள்ளங்கி.
ரத்த அழுத்தம் சீராகும்
ரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது இந்த முள்ளங்கி அதை நாள் வாரத்தில் ஒரு நாளாவது முள்ளங்கியை சாப்பிட்டு வாருங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.
முள்ளங்கியின் தீமைகள்
முள்ளங்கியுடன் உளுந்தை சேர்த்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் இது உங்க உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதனால் உளுந்துடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது.அதேபோல் முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் நலம் குறைவு ஏற்படும்.கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
என்னதான் முள்ளங்கி இவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தாலும் இந்த முள்ளங்கி அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளப்படாது சிலருக்கு முள்ளங்கி பிடிக்காது இது நாள் உங்களுக்கு ஏதேனும் உடல் நலம் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
முள்ளங்கி சாறு நன்மைகள்
முள்ளங்கி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகிவிடும் உடலில் நீர் சத்தை அதிகரிக்கும் இந்த முள்ளங்கி சாறு.முள்ளங்கி சாறு உடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் இருமல் சரியாகும்.சிலருக்கு விக்கல் வருவது சாதாரண ஒரு விஷயமாகும் ஆனால் ஒரு சில நபர்களுக்கு விக்கல் வந்தால் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை கூட வந்து கொண்டே இருக்கும் இதை தடுப்பதற்கு முள்ளங்கி சாறு எடுத்து மிதமான சூட்டில் குடித்து வந்தால் உடனே சரியாகிவிடும்.