முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன் | Muthukil Macham Iruthal
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.மச்சம் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்படுகிறது அந்த வகையில் நம் உடலில் இருக்கும் மச்சங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து பலன் அமைகிறது. முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கு முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்
பெண்களின் முதுகு புறத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு கொண்டே இருக்கும். முதுகில் மச்சம் இருக்கும் பெண் பிறரின் வேலையை தேவையில்லாமல் தானே சென்று அந்த வேலையை செய்து அவதிப்பட்டு கொண்டிருப்பார்.இடது புற முதுகில் மச்சம் இருக்கும் பெண்கள் மிகவும் இளகிய குணம் கொண்டவராக இருப்பார்கள்.
பிறரிடம் நட்பாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பார்கள்.தேவை இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அனைவரையும் எளிதில் நம்புவராக இருப்பதால் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வார்கள்.
ஆண்கள் முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்
முதுகில் மச்சம் இருக்கும் ஆண்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்ப்பார்கள். முடியாது என்று சொன்னால் அதை நான் முடித்துக் காட்டுகிறேன் என்று சபதம் போடுவர்களாக இருப்பார்கள்.தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக கொண்டு இருப்பார்கள்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |