நல்லெண்ணெய் பயன்கள் | Nallennai Benefits in Tamil
எள்ளில் இருந்து கிடைக்கக்கூடியது நல்லெண்ணெய் பல நோய்களுக்கு மருந்தாகவும் சிறந்த உணவாகவும் விளங்குகிறது.அதற்குக் காரணம் நல்ல எண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களும் அதிக ஊட்டச்சத்துக்கள் ஆகும். நல்லெண்ணையில் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகம், போலிக் அமிலம், விட்டமின்கள் மற்றும் அமினோ, அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் உயர்தரமான ஆன்டிஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது.
நல்லெண்ணெயில் லெசித்தீன் என்கிற மூலப்பொருளும் லினோலிக் அமிலம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பினை கரைத்து நல்ல கொழுப்பின் அளவே அதிகரிக்க செய்கிறது.
நல்லெண்ணையே அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியை அள்ளித்தரும்.
நல்லெண்ணையின் பயன்கள் – Nallennai Benefits in Tamil
மரச்செகில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் அருந்தலாம் அல்லது ஒரு கைப்பிடி அளவு சூடான சாதத்தில் ஓர் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி பிசைந்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
நல்லெண்ணெயில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்புகளை பலம் பெறச் செய்து மற்றும் எலும்புப்புரை வராமல் தடுக்கிறது.நல்லெண்ணையே ஒரு ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்புண், குடல் புண், ஆகியவை குணமாகும் அது மட்டும் அல்லாமல் அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண்கள் தடுக்கப்படும் மற்றும் வயிற்றுப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
நல்லெண்ணையானது பெண்கள் பயன்படுத்தி வந்தால் கர்ப்பப்பையை பலமடையும், கர்ப்பப்பை சார்ந்த நோய்கள் குறையும் மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும். ஆண்கள் நல்லெண்ணையை சேர்த்துக் கொண்டால் ஆண்மை குறைபாடு நீங்கும். மேலும் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் எலும்பு தேய்மானம், படபடப்பு, பதட்டம் போன்ற பிரச்சினைகளை தடுக்கும்.
நல்லெண்ணையே ஒரு ஸ்பூன் அளவு முகத்தில் தடவி வரும்போது முகத்தில் பொலஜின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சருமம் பளபளப்பாக மாற்றும் முகச்சுருக்கம்,முகம் வறட்சியை தடுத்து சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும் .
நல்லெண்ணெய் முடி பயன்கள்
நல்லெண்ணையானது வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்படும். நல்லெண்ணெய் நல்லெண்ணையானது தலையில் உள்ள மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். இது மட்டும் அல்லாமல் முடி உதிர்வு தடுக்கப்படும் உடல் புத்துணர்ச்சி பெறும் மற்றும் கண்கள் ஆரோக்கியம் மேம்படும்.
ஒரு சிலருக்கு உடல் சூட்டினால் சீக்கிரமாக நரை முடி ஏற்படும் அதனால் நல்லெண்ணையை உபயோகித்தால் இளநரை வராமல் தடுக்கும்.நல்லெண்ணையை உச்சந்தலை அல்லது வயிற்றில் தடவினால் உடல் சூடு குறையும்.
நல்லெண்ணெய் தீமைகள்
ஒரு சிலருக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் அனாபிளாக்செஸ் போன்ற சில வகையான ஒவ்வாமைகளும் வழி வகுப்பதாகும். அதற்கான அறிகுறிகள் சுவாசிப்பதில் சிரமம், தலைச்சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் மற்றும் வயதானவர்கள் நல்லெண்ணையே அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அனைவரும் நல்லெண்ணையை அதிக அளவு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.