நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துர்கா சிங் என்பவரின் மகன் சசிகுமார் (22) கல்லூரி விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
3 ஆண்டுகள் கடந்த பின்பு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக விடுதிக்குச் சென்றுள்ளார் அப்பொழுது அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.இதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அருகில் உள்ள புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பெயரில் புதுச்சத்திரம் காவலர்கள் கல்லூரிக்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர்கள் தொடர்ந்து மாணவரின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று பல கட்டங்களில் காவலர் விசாரித்து வருகின்றனர்.இந்தச் சம்பவம் கல்லூரியை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.