இந்த உலகத்தில் சாக்லேட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். சாக்லேட் வேண்டாம் என்று சொல்பவர்களை பார்ப்பதே அரிதான விஷயம் அந்த அளவுக்கு சாக்லேட் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாகும்.
பெரும்பாலும் சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும்,பல்லு பாதிப்படையும் என்று சொல்லி சாக்லேட் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள்.ஆனால் நாம் சாப்பிடும் சாக்லேட்களில் பல நன்மைகள் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாங்க நம்ம சாப்பிடுற சாக்லேட்டில் பல நன்மைகள் இருக்கிறது அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.
சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
சாக்லேட் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு குறைவு வரும் என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துக்கள் குறையும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சொன்னால் போனால் இதயம் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் வராதாம்.
டார்க் சாக்லேட்டில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதால் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியை தூண்டும் உணர்வையும் டார்க் சாக்லேட் கொண்டுள்ளது.
உடலின் எடையை குறைக்க வேண்டும் என பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு டார்க் சாக்லேட் உதவிகரமாக இருக்கிறது அதாவது உணவு சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைகிறது என்று சொல்லப்படுகிறது.
டார்க் சாக்லேட்டில் பல நன்மைகள் இருக்கிறது அதில் ஒன்று குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு டார்க் சாக்லேட்டில் சத்துக்கள் இருக்கிறது.
சாக்லேட் சாப்பிடுவதின் தீமைகள்
சாக்லேட்டில் தான் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது அதனால் நம் தினந்தோறும் சாக்லேட்டை சாப்பிட்டுக் கொண்டே இருப்போம் என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் எந்த விஷயமாக இருந்தாலும் சரி உணவுப் பொருள்களாக இருந்தாலும் சரி அதிகளவு நன்மைகள் இருந்தாலும் அதில் குறைந்த அளவு தீமைகளும் இருக்க தான் செய்கிறது. சாக்லேட் அதிக அளவில் சாப்பிட்டால் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அதனால் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.