ஓணான் கனவில் வந்தால் என்ன பலன் | Onaan kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
பல்லி,ஓனான், உடும்பு,பச்சோந்தி போன்ற பல உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்கிறது.அப்படிப்பட்ட உயிரினங்களில் ஓணான் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஓணான் கனவில் வந்தால் என்ன பலன்
ஓனான் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்வில் பண வசதி படைத்தவராக மாறுவார். நீங்கள் யாரோ ஒருவரை மதிப்பீர்கள் அவர்கள் மூலம் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
உங்கள் ஆழ் மனதில் சொல்வதைப்போல நடப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீக்கிவிட்டு புதிய வாழ்விற்கு முன்னேறுவீர்கள். உங்களுக்கு தெரியாதவர் ஒருத்தர் உங்களில் யோசனையும் ஆற்றலையும் அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்.
அவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும. உங்கள் வாழ்க்கையில் லட்சியங்கள் எதுவும் இருந்தால் அதை நேர் வழியில் செய்து முடிப்பீர்கள். உங்களில் உண்மையான உணர்வையும் இயல்பையும் பிறரிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
தற்போதைக்கு உங்களுக்கு சில பொறுப்புகள் வழங்கப்படும் அந்த பொறுப்புகளை இப்பொழுது என்னால் பண்ண முடியாது என்று அதிலிருந்து விலகி இருப்பீர்கள். எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
நாகம் கனவில் வந்தால் என்ன பலன் |
மீன் கனவில் வந்தால் என்ன பலன் |
பச்சை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன் |