நாமக்கல் மாவட்டம் பரமத்தி கந்தபாளையம் அருகே உள்ள பாவாடை தெருவை சேர்ந்தவர் தான் ராஜா முகமது (44). ராஜா முகமது நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த நாளன்று தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அவரின் எதிரே வந்த லாரி அவரின் இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.
இதில் தனது கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் இருந்து ராஜா முகமது கீழே விழுந்தார்.சம்பவம் நடந்த இடத்திலிருந்து அவர்கள் ராஜா முகமதை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்பொழுது ராஜா முகமது சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தை குறித்து நல்லூர் காவலர் வழுக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.