பச்சை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் | Pachai Pambu Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.பொதுவாக பாம்பு கனவில் வந்தாலே நமக்கு பயமாக தான் இருக்கும்.
பாம்பு கனவில் வந்தால் நமக்கு எதுவும் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.நேரில் பாம்பு வந்தாலும் கனவில் பாம்பு வந்தாலும் பயமாக தான் இருக்கும். நாம் பார்க்கும் பாம்பிற்கு விஷம் இருந்தாலும் இல்லையென்றாலும் பாம்பு என்றாலே ஒரு வித பயம்தான் அந்த வகையில் பச்சை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பச்சை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
பச்சை பாம்பு கனவில் வந்தால் நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். நேர்மையான எண்ணங்களால் வாழ்வில் வளர்ச்சி பெறுவதையும் அதாவது அதிர்ஷ்டம் செல்வங்கள் கிடைப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
குட்டி பச்சை பாம்பு கனவில் வந்தால்
குட்டி பச்சை பாம்பு கனவில் வந்தால் திருமணம் ஆகாம இருப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடப்பதற்கும் திருமணம் ஆகி குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
பச்சை பாம்பு மணலில் இருப்பது போல் கனவில் வந்தால்
பச்சை பாம்பு மணலில் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரை உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் ஏமாற இருப்பதை உணர்த்துகிறது. ஏதோ ஒரு விஷயத்தை பிறருக்கு தெரியாமல் மறைத்து வைக்க முயற்சி செய்கிறீர்கள்.
வெள்ளை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
பச்சை மலைப் பாம்பு கனவில் வந்தால்
பச்சை மலை பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவர் மன தைரியத்துடன் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பார்.
நிறைய பச்சை பாம்பு கனவில் வந்தால்
நிறைய பச்சை நிற பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவர் தெரிந்த நபர்களிடமும் மற்றும் தெரியாத நபர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
இறந்த பச்சை பாம்பு கனவில் வந்தால்
இறந்த பச்சை பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவர் பழைய நண்பர்களை கூடிய விரைவில் சந்திப்பார்.
இளம் பச்சை பாம்பு கனவில் வந்தால்
இளம் பச்சை பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவர் தனக்கு சாதகமான மாற்றங்கள் வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பதையும் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படும் அதை பயன்படுத்தி கொள்ளவும்இந்த கனவு உணர்த்துகிறது மேலும் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன் |
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |
பெரிய பாம்பு கனவில் வந்தால் |
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் |