பச்சைமலை சுற்றுலா தளங்கள் | Pachaimalai Hills in Tamil
வணக்கம் நண்பர்களே.!!கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் குளிர்ச்சியான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள பச்சைமலை கோடை காலத்தில் குளிர்ச்சியாக பயணம் செல்வதற்கு ஏற்ற இடம் ஆக அமைந்துள்ளது.
பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்,சேலம் மாவட்டங்களில் பரவி இருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள கொல்லிமலை,கல்வராயன்,மலை,சேர்வராயன் மலை,ஜவ்வாது மலை போன்ற மலை தொடர்களில் பச்சை மலையும் ஒன்றாகும்.
பச்சை மலை சிறப்புகள்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் பச்சைமலை அமைந்துள்ளது. 527 சதுர கிலோமீட்டர் இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 1,072 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.
பச்சை மலையில் சுமார் 154 பறவை இனங்களும் 135 பட்டாம்பூச்சி இனங்களும் இருக்கிறது. பச்சைமலையில் உள்ள காப்பு காடுகளில் மான்கள் வாழ்கின்றன.பச்சைமலை முழுவதும் வனத்துறையின் பாதுகாப்பின் கீழ் செயல்படுகிறது.
சின்னாறு,கல்லாறு,வெல்லாறு,மருதையாறு போன்ற நதிகள் பச்சை மலையை தலைமையிடமாக கொண்டுள்ளது.பச்சை மலையில் மங்கலம் அருவி,கோரையாறு அருவி இருக்கிறது.
பச்சை மலை வரலாறு
பச்சை மலையை சங்ககாலத்தில் விச்சிமலை என்று அழைக்கப்பட்டது. மலையஞ்சிவந்தி எனப்படும் விச்சிப்பூ இம்மலையில் இந்த காலத்தில் அதிகமாக பூக்கிறது. விச்சி மலையநாடு மடங்கா விளையுள் நாடு என்று கபிலாரால் போற்றப்பட்டுள்ளது.
இந்த மலையின் மன்னன் விச்சியர் பெருமகன் வேந்தன் என்பருவுடன் போரிட்டதை பார்த்த குரும்பூர் மக்கள் புலியும் குறும்பூள் பறவையும் போரிடுவது போல் உள்ளது என்று கூறி ஆரவாரம் செய்தனர்.
பச்சை மலையில் பார்க்க வேண்டிய இடங்கள்
மங்களம் நீர் வீழ்ச்சி |
கோரையாறு நீர்வீழ்ச்சி |
மயில் ஊற்று நீர்வீழ்ச்சி |
மங்களம் நீர் வீழ்ச்சி
மங்கலம் நீரூற்று திருச்சியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு திருச்சியில் இருந்து துறையூர் உப்பிலியாபுரம் சோழபுரம் வழியாக செங்காட்டுப்பட்டிக்குச் செல்லும் வழியில் இந்த அருவி அமைந்துள்ளது.
இந்த அருவிக்கு செல்வதற்கு சாலை வசதிகள் உள்ளது.பச்சை மலைக்கு செல்வதற்காக அடிக்கடி பேருந்துகள் இல்லை தனி வாகனத்தில் செல்வது மிகச் சிறந்த ஒன்றாகும்.
கோரையாறு நீர்வீழ்ச்சி
கோரையாறு அருவி பெரம்பலூரில் இருந்து வேம்பாந்தட்டை கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறைக்கு சென்று அங்கிருந்து பச்சை மலை அடிவாரத்தில் உள்ள கோரையாறு கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கிராமத்திற்கு பேருந்து வசதியும் இருக்கிறது. இங்கு தனி வாகனங்களிலும் செல்லலாம்.
கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் அதன் பிறகு கோரையாறு அருவிய சென்றடையலாம்.கோரையாறு அருவின் கீழ் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது. இந்த அறிவிக்கு அக்டோபர் ஒரு முதல் டிசம்பர் மாதங்கள் வரை சீசன் நாளாகும்.
மயில் ஊற்று நீர்வீழ்ச்சி
மயில் ஊற்று அருவி இந்த அருவி பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மயில் ஊற்று அருவியில் மழை காலங்களில் தண்ணியை காண முடியும்.
இந்த அருவியை காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர்கள் வருகை தருகின்றார்கள் ஆனால் இந்த அருவிக்கு செல்வதற்கு மிகவும் கடினமான பாதையாக இருக்கிறது அதனால் பெரும்பாலானூர் இந்த அருவிக்கு செல்ல முடியாமல் இருக்கிறது.
பச்சை மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
இந்த மலைக்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் துறையூர் போக வேண்டும் அங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.துறையூர் திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் சேலம் மாவட்டங்களில் பரவி இருக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும் பச்சைமலை.
அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்
ஏற்காடு சுற்றுலா தலங்கள் |
வால்பாறை பற்றிய சிறப்பு தகவல்கள் |
தனுஷ்கோடி பற்றிய சிறப்பு தகவல்கள் |