Palli Vilum Palan In Tamil | பல்லி விழும் பலன்
Palli Vilum Palan In Tamil:வணக்கம் நண்பர்களே.!! பல்லி நம் மீது விழுந்தால் தீமை நடந்து விடும் என்று நம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். பள்ளி தலை கையில் கால் நெஞ்சில் இதுபோன்று உடல் பாகங்களில் பல்வேறு இடங்களில் பல்லி விழும். இந்த ஒவ்வொரு இடத்திற்கும் பள்ளி நம் மீது விழுந்தால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று இந்த பதிவில் முழு விவரத்தை பார்க்க போகிறோம்.
பல்லி விழும் பலன்
நம் நாட்டில் பல சம்பிரதாயங்கள் இருக்கிறது. காக்கா நம் வீட்டிற்கு வந்து நாம் வைக்கும் உணவை அருந்தினால் நம் முன்னோர்கள் வந்து நம் வீட்டில் சாப்பிடுகிறார்கள் என்று பெரியவர்கள் கூறுவார்கள் அதே போல் நாம் ஒரு செயல் செய்து கொண்டிருக்கும் பொழுது அல்லது உட்கார்ந்து இருத்தல் படுத்திருக்கும் பொழுது பல்லி நம் மீது விழும் பல்லி நம் மீது விழுந்தால் பல பலன்கள் இருக்கிறது அது எங்கு விழுகிறதோ அதற்கு ஏற்றது போல் பலன்கள் உள்ளது.
பொதுவாக நம் மீது பல்லி விழுந்தால் நாம் அனைவரும் ஏதோ தீங்கு நடக்கப் போகிறது என்று பயந்து கொண்டு இருப்போம். ஆனால் பல்லி விழும் இடத்தை பொறுத்து பலன்கள் இருக்கிறது பல்லி ஒரு சில இடத்தில் விழுந்தால் நமக்கு தீமைகள் நடக்கலாம் அதே போல் ஒரு சில இடத்தில் பள்ளி விழுந்தால் நன்மைகளும் நடக்கலாம் அதைப் பற்றிய முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.
பல்லி உடலில் எந்த பாகத்தில் விழுந்தாலும் சரி உடனே குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தால் தீமைகள் எதுவும் வராமல் இருக்கும்.
பல்லி விழும் பலன் ஆண்களுக்கு
ஆண்கள் மீது பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று பார்ப்போம் பொதுவாக ஆண்களின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நல்ல சகுனம். திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். திருமணம் ஆன ஆண்கள் தங்களின் மனைவியுடன் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள்.
படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் பெறுவார்கள்.வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் அல்லது தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வேளையில் ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.
ஆண்கள் தலையில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு எதிரிகளுடன் மோதல்கள் ஏற்படும் தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கெட்ட பெயர் கிடைக்கும். படிப்பவராக இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பல்லி விழும் பலன் இடது கை
ஆண்கள் முகத்தில் இடது கண்ணில் பல்லி விழுந்தால் திருமணம் ஆகி இருந்தால் தங்களின் மனைவியின் அன்பு அதிகரிக்கும் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் நல்ல ஒரு வாழ்க்கை துணை கிடைக்கும்.
ஆண்களின் வலது கண்ணில் பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு செயலை செய்ய நினைத்திருந்தால் அந்த செயலை தள்ளிப் போடுவது மிகவும் நல்லது. இதை பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் அந்த செயலை செய்தால் அதில் மிகப்பெரிய தோல்வி கிடைக்கும்.
ஆண்களின் மேல் உதட்டில் பல்லி விழுந்தால் மிகப்பெரிய சண்டைக்கு காத்துக் கொண்டிருக்க வேண்டும் அதேபோல் கீழ் உதட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆண்களின் வலது பாதத்தில் பல்லி விழுந்தால் நோய்களால் மிகவும் கஷ்டப்படக்கூடும் அதுவே இடது பாதத்தில் பல்லி விழுந்திருந்தால் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு கெட்டது நடக்கப் போகிறது என்று அர்த்தம். எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
ஆண்களின் மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய நன்மை நடக்கக்கூடும்.ஆண்களின் வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப் பெரிய கெட்டது நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதனால் வெளியே எங்கும் செல்ல இருந்தால் பார்த்து கவனமாக செல்ல வேண்டும்.
தொழில் தொடங்க இருந்தாலும் கொஞ்ச நாள் தள்ளி போட்டு செய்யவும். அதுவே இடது மணிக்கட்டில் விழுந்தால் அது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஏதாவது தொழில் செய்ய நினைத்திருந்தாலும் உடனடியாக அந்த தொழிலை செய்ய ஆரம்பிக்கலாம்.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு
பெண்கள் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.பெண்களின் இடது பக்கத்தில் எந்த இடத்திலும் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய நல்ல விஷயம் நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதாவது நீண்ட நாட்களாக திருமணத்திற்கு வரன் எதுவும் கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.
திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும். படிக்கும் பெண்களாக இருந்தால் படிப்பில் முதலிடம் பிடிப்பார்கள். அதேபோல் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் உயர் பதவி மற்றும் சம்பளம் உயரும்.
பெண்கள் தலை மீது பல்லி விழுந்தால் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் மிகப்பெரிய பிரச்சனை வரும் மரணம் கூட நடக்க வாய்ப்பு உள்ளது அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களை கொஞ்ச நாள் தள்ளி வைப்பது நல்லது.
பெண்களின் இடது கண்களில் பல்லி விழுந்தால் அவர்கள் திருமணம் ஆகி இருந்தால் தங்களின் வாழ்க்கைத் துணை உடன் மிகவும் அன்பாக இருப்பார்கள். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு அன்பானவர் வாழ்க்கை துணையாக கிடைப்பார்.
அதுவே வலது கண்ணில் பல்லி விழுந்தால் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் அதாவது புதிதாக எதுவும் ஒரு செயலில் முயற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் அந்த செயலை கொஞ்ச நாள் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது. மன அழுத்தம் அதிகரிக்கும்.
பெண்களின் கீழ் உதட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு புதிய பொருட்கள் கிடைக்கும் அதாவது பெண்கள் ஏதேனும் பொருட்கள் வாங்க நினைத்து இருப்பார்கள் அந்தப் பொருட்கள் அவர்கள் விரைவில் வாங்குவதற்கான அறிகுறியாகும்.
பல்லி காலில் மிதித்தால் என்ன பலன்
அதுவே மேல் உதட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது அதனால் அவர்கள் மிகவும் கவனமாக பேச வேண்டும்.பெண்களுக்கு கால்களில் எந்த பாதத்தில் பல்லி விழுந்தாலும் அவர்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கப் போகிறது என்று அர்த்தம் அதாவது வலது காலில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு புதிதாக நோய் வரும் அதுவே இடது காலில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் வரும் எந்த ஒரு செயல் செய்தாலும் அதை தோல்வியிலேயே முடியும்.
பெண்களின் மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம் நினைத்து கூட பார்க்காத அளவுக்கு பணம் வரவுகள் வரும்.பெண்களின் இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடைக்கும்.
எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நல்லது நடக்கும் அதுவே வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு கெட்டது தான் நடக்கும் அதனால் ஏதேனும் காரியங்கள் செய்ய இருந்தால் அதை தள்ளிப் போடுவது மிகவும் நல்லது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
right hand பல்லி விழும் பலன்
ஆண் பெண் இருவருக்கும் வலது கையில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.பொதுவாகவே ஆண்களுக்கு வலது பக்கத்தில் எந்த இடத்திலும் பல்லி விழுந்தாலும் நல்லது தான்.
பெண்களுக்கு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் மிகவும் கெட்ட சகுனம் ஆகும்.வலது கை மணிக்கட்டில் பல்லி விழுந்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப் பெரிய பிரச்சனைகள் வரும். வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகள் நடக்க வாய்ப்பு உள்ளது அதனால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
ஆண் பெண் இருவருக்கும் வலது தோள் பட்டையில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் அதுவே வலது கைவிரலில் பல்லி விழுந்தால் உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
பல்லி விழும் பலன் எத்தனை நாட்கள்
பல்லி விழுந்தால் பலன்கள் எத்தனை நாள் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம் ஆண் பெண் யாராக இருந்தாலும் இது இருவருக்குமே ஒரே பலன்களை தான் தரும். பொதுவாக பல்லி மேலே விழுந்தால் ஒரு வாரத்திற்கு அந்த பலன்கள் இருக்கும் அதாவது ஏழு நாட்கள் வரை அதன் பலன்கள் இருக்கும் பல்லி விழும் இடத்தை பொறுத்து பலனுக்கான நாட்கள் மாறும்.
பல்லி விழும் இடத்தை பொறுத்து ஏழு நாட்களும் இருக்கலாம் அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம். பல்லி விழும் இடத்தை பொறுத்து தான் பலன்கள் அமையும்.
பல்லி காலில் ஏறினால் என்ன பலன்
பல்லிகாலில் ஏறினால் என்ன பலன் பார்ப்போம் இந்த பலன் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். பல்லி பொதுவாக காலில் ஏறினாலே அது ஒரு கெட்ட சகுனத்தை கொடுப்பதற்கான அறிவுறுத்தல் ஆகும். பல்லி காலில் உள்ள வலது பாதத்தில் ஏறினால் உங்கள் உடம்பு ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் பெறவும்.
உங்களுக்கு தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அதுவே இடது காலில் பல்லி ஏறினால் இதுவும் உங்களுக்கு மருத்துவ செலவை அதிகரிக்க தான் அறிவுறுத்துகிறது அதனால் நீங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
இரண்டு கால்களிலும் தொடை பகுதியில் ஏறினால் உங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் தீமை செய்வீர்கள் அதாவது நீங்கள் நன்மை என்று நினைத்து உங்கள் பெற்றோர்களுக்கு செய்தால் அது தீமையாகவே போய் முடியும் அதனால் உங்கள் பெற்றோருக்கு ஏதேனும் செய்ய நினைத்தால் அந்த காரியத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது.
உங்கள் குடும்பத்தில் ஏதேனும் புதிதாக விசேஷங்கள் செய்ய நினைத்திருந்தால் குடும்பத்தினர் அனைவரிடமும் கேட்டு செய்வது மிகவும் நல்லது.
இடது கையில் பல்லி விழுந்தால் என்ன பலன்
பல்லி இடது காலில் ஏறினால் என்ன பலன் என்று பார்ப்போம் பொதுவாக ஆண்களுக்கு வலது காலிலும் பெண்களுக்கு இடது காலிலும் விழுந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் அடிக்கும்.
ஆண் பெண் இருவருக்கும் இடது காலில் உள்ள பாதத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் அதாவது புதிதாக நோய் ஏதேனும் வரும் அதுவே இடது பாதத்தில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய தீமைகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.
அதாவது அவர்கள் புதிதாக ஏதேனும் காரியங்களை செய்ய நினைத்திருந்தால் அந்த காரியம் தோல்வியிலேயே போய் முடியும் அதனால் எந்த ஒரு புதிய காரியமாக இருந்தாலும் நல்ல ஆலோசனை செய்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அது மிகப் பெரிய தோல்வியில் முடியும்.
ஆண் பெண் இருவருக்கும் இடது காலில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு நல்லதே நடக்கும். அதாவது அவர்களுக்கு புதிதாக ஏதோ ஒன்று கிடைக்க போகிறது என்று அர்த்தம் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் நல்ல வரன் கிடைக்கும் அதுவே திருமணம் ஆனவராக இருந்தால் தங்கள் கணவன் மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்வார்கள்.
வலது காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்
படிக்கும் மாணவர்களாக இருந்தால் படிப்பில் முன்னேற்றம் அடைந்து படிப்பின் மூலமாக ஏதோ ஒரு புதிய சாதனை செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம். தொழில் அல்லது வேலை செய்பவர்களாக இருந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஒரு முன்னேற்றம் கிடைக்கும் அந்த முன்னேற்றம் மூலம் நீங்கள் வெளிநாடுகளில் சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இடது முழங்காலில் பல்லி விழுந்தால் மிகவும் நல்லது எந்த ஒரு புதிய காரியம் தொடங்க நினைத்தாலும் விரைவில் அதை தொடங்கலாம் அதில் உங்களுக்கு அதிக லாபம் மற்றும் வெற்றியும் கிடைக்கும்.
பல்லி விழும் பலன் உச்சந்தலை
பல்லி உச்சந்தலையில் விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் இந்த பலன் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் பல்லி உடல் பகுதியை எந்த பகுதியில் விழுந்தாலும் அதற்கான தீமைகள் குறைவாக தான் இருக்கும் அதுவே பல்லி நம்ம உடம்பில் உச்சந்தலையில் விழுந்தால் அது மிகவும் கெட்டதாகும்.
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினர் உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு தீமை நடக்கப் போகிறது என்று அர்த்தம் அந்த தீமை மரணமா கூட இருக்கலாம் அதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பல்லி உச்சந்தலையில் விழுந்தால் உடனடியாக குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது கடவுளை வணங்கி விட்டு உச்ச நிலையில் பல்லி விழுந்தால் என்ன பரிகாரம் என்று தெரிந்து கொண்டு அந்த பரிகாரத்தை விரைவில் செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு தீமைகள் நடக்கும்.
முதுகில் பல்லி விழும் பலன்
முதுகில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவருக்கும் இந்த பலன் பொருந்தும். உங்களுக்கு மிகப்பெரிய துன்பங்கள் ஏற்படும்.
நீங்கள் ஏதேனும் புதிதாக ஒரு தொழில் தொடங்க இருக்கிறீர்கள் என்றால் அந்த தொழிலை கொஞ்ச நாள் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது அதையும் மீறி நீங்கள் அந்த தொழிலை தொடங்கினால் அந்த தொழிலில் நீங்கள் நஷ்டம் அடைவீர்கள்.
உங்கள் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு நிறைய கவலைகள் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அந்த செயல் முழுவதுமாக நம்மால் செய்ய முடியுமா என்று யோசித்து கவலை கொண்டே இருப்பீர்கள்.
புதிதாக ஒரு செயலை செய்ய நினைத்தாலும் அதில் மகிழ்ச்சி அதிகமாக இல்லாமல் கவலை தான் அதிகமாக இருக்கும்.
தலையில் பல்லி விழும் பலன்
பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.
பொதுவாக பல்லி நம் உடம்பில் எந்தப் பகுதியில் விழுந்தாலும் அதற்கு நன்மைகளும் தீமைகளும் இருக்கும் ஆனால் பல்லி தலையில் விழுந்தால் மட்டும் அவர்களுக்கு மிகப்பெரிய கெட்டது நடக்கப்போகிறது என்றும் அதாவது அவர்களின் மரணத்தை கூட அது குறிக்கலாம் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
பல்லி தலையில் விழுந்தால் எந்த ஒரு செயல் செய்து கொண்டிருந்தாலும் உடனடியாக குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வேண்டுவது மிகவும் நல்லது.
கடவுளே வேண்டி விட்டு தலையில் பல்லி விழுந்தால் என்ன பரிகாரம் என்று தெரிந்து கொண்டு அந்த பரிகாரத்தை விரைவில் செய்வது நல்லது இல்லை எனில் உங்களுக்கு மிகப்பெரிய கெட்டது நடந்தே தீரும் அதனால் நீங்கள் பல்லி தலையில் விழுந்தால் மட்டும் அதற்கான பரிகாரத்தை விரைவில் செய்வது மிகவும் நல்லது.
பல்லி விழும் பலன் வலது கால்
வலது முழங்காலில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய தீமை நடக்கும் உள்ளது அதனால் வெளிநாடு பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்களை கொஞ்ச நாள் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது.
பல்லி விழும் பலன் கால்
பல்லி வலது காலில் விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் இந்த பலன் ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.இடது முழங்காலில் பல்லி விழுந்தால் மிகவும் நல்லது எந்த ஒரு புதிய காரியம் தொடங்க நினைத்தாலும் விரைவில் அதை தொடங்கலாம் அதில் உங்களுக்கு அதிக லாபம் மற்றும் வெற்றியும் கிடைக்கும்.
பல்லி விழும் பலன் பரிகாரம்
பல்லி காலில் விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவருக்கும் இந்த பலன் பொருந்தும்.பல்லி நம் மீது எந்த பகுதியில் விழுந்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது அது நன்மையாக இருந்தால் நாம் எதுவும் செய்ய வேண்டாம் அதுவே தீமையாக இருந்தால் அதற்கான பரிகாரங்கள் நிறைய இருக்கிறது அந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் நமக்கு நடக்கும்.
தீமைகள் முழுவதும் நீங்கிவிடும் என்று சொல்ல முடியாது. நமக்கு நடக்கும் பிரச்சனைகளை இருந்து ஒரு அளவுக்கு விடுபட முடியும் அதனால் இந்த பரிகாரங்களை நீங்கள் செய்தால் உங்களுக்கு நடக்கும் தீமைகள் நீங்கி விடும்.
பல்லி நம் உடம்பில் எந்த பகுதியில் விழுந்தாலும் எந்த ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும் உடனடியாக குளித்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமிக்கு ஒரு விளக்கு ஏற்றி கடவுளை வணங்குவது மிகவும் நல்லது அல்லது அருகில் ஏதேனும் கோயில் இருந்தால் அங்கு சென்று விளக்கேற்றி கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.
உங்கள் குலதெய்வம் உங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.வாழ்வில் ஒரு நாளாவது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜா பெருமாள் கோயிலில் தங்கம் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குவது நல்லது.
இந்த பரிகாரங்கள் எல்லாம் செய்தால் இந்த பரிகாரங்கள் எல்லாம் செய்தால் பள்ளி உங்கள் மீது விழுந்தாலும் உங்களுக்கு எந்த ஒரு தீமைகளும் நடக்காது. உங்கள் மீது விழுந்தாலும் உங்களுக்கு எந்த ஒரு தீமைகளும் நடக்காது.
Read Also:
சிவன் கனவில் வந்தால் என்ன பலன்