பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் இன்று மாற்றப்படும் பழந்தமிழ் நூல்களில் ஒன்றாகும்.கிபி மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை இருந்தது என்பார்கள். தமிழர்கள் பெருமைகளை பற்றி எடுத்துரைக்க பல நூல்கள் காணப்படுகின்றது. அவற்று சங்க கால இலக்கியங்கள் பத்து பாட்டுகளும் ஒன்றாகும்.பத்துப்பாட்டில் மிக சிறிய பாட்டு 103 அடிகளை கொண்டது. மிக பெரிய பாட்டு 782 அடிகளை கொண்டது.
பத்துப்பாட்டு நூல்கள் யாவை
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
போன்ற பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு ஆகும்.
பத்துப்பாட்டு நூல்கள் குறித்து விளக்குக
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டு நூல்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை.இந்த நூலின் மதுரையை சேர்ந்த நக்கீரர் என்ற புலவர் இயற்றினார் இந்த நூல் 317 அடிகளையும் கொண்டு இருக்கிறது ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டிருக்கிறது.
நூல் பெயர் | திருமுருகாற்றுப்படை |
நூலாசிரியர் | நக்கீரர் |
பாட்டுடைத் தலைவன் | முருகன் |
பாடல் அடி | 317 |
பா வகை | ஆசிரியப்பா |
பொருநராற்றுப்படை
இந்த நூல் முடத்தாம கண்ணியார் இன்னும் ஆசிரியரால் இயற்றப்பட்டது.கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனை பாட்டுடை தலைவனாக கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் 248 அடிகளை கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவால் ஆனது.
நூல் பெயர் | பொருநராற்றுப்படை |
நூலாசிரியர் | முடத்தாம கண்ணியார் |
பாட்டுடைத் தலைவன் | சோழன் கரிகாலன் |
பாடல் அடி | 248 |
பா வகை | ஆசிரியப்பா |
சிறுபாணாற்றுப்படை
இந்த நூல் நத்தத்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லிய கோடான் என்பவரை பாட்டுடை தலைவனாக கொண்டு எழுதப்பட்டது இந்த நூல் 268 அடிகளைக் கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | சிறுபாணாற்றுப்படை |
நூலாசிரியர் | நத்தத்தனார் |
பாட்டுடைத் தலைவன் | நல்லிய கோடான் |
பாடல் அடி | 268 |
பா வகை | ஆசிரியப்பா |
பெரும்பாணாற்றுப்படை
இந்த நூலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் இயற்றியுள்ளார். காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவரை பாட்டுடை தலைவனாக கொண்டு பாடப்பட்டிருக்கிறது.இந்த நூல் 500 அடிகளை கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | பெரும்பாணாற்றுப்படை |
நூலாசிரியர் | கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
பாட்டுடைத் தலைவன் | தொண்டைமான் இளந்திரையன் |
பாடல் அடி | 500 |
பா வகை | ஆசிரியப்பா |
முல்லைப்பாட்டு
இந்த நூலை காவேரிப்பம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் பாடியுள்ளார். இந்த நூல் பாண்டியன் நெடுஞ்செழியன் அவர்களை பாட்டுடை தலைவனாக கொண்டு பாடப்பட்டது. முல்லைத் திணையை பாடியதால் முல்லைப்பாட்டு என்று பெயரிடப்பட்டது. இந்த 103 அடிகளைக் கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | முல்லைப்பாட்டு |
நூலாசிரியர் | நப்பூதனார் |
பாட்டுடைத் தலைவன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
பாடல் அடி | 103 |
பா வகை | ஆசிரியப்பா |
மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டு நூலில் மிகவும் நீண்ட நூல் இதுதான்.இந்த நூலை மாங்குடி மருதனார் என்ற புலவர் இயற்றியுள்ளார்.இந்த நூல் 782 அடிகளை கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | மதுரைக்காஞ்சி |
நூலாசிரியர் | மாங்குடி மருதனார் |
பாட்டுடைத் தலைவன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
பாடல் அடி | 782 |
பா வகை | ஆசிரியப்பா,வஞ்சிப்பா |
நெடுநல்வாடை
நெடுநல்வாடை நூலை இயற்றியவர் நக்கீரர். இந்த நூல் 188 அடிகளை கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | நெடுநல்வாடை |
நூலாசிரியர் | நக்கீரர் |
பாட்டுடைத் தலைவன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
பாடல் அடி | 188 |
பா வகை | ஆசிரியப்பா |
குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு நூலை இயற்றியவர் குறிஞ்சி கபிலர்.இந்த நூல் தமிழ் அகத்தினை சிறப்பை கூறும் நோக்கத்தில் இருக்கின்றது.இந்த நூல் ஆரிய அரசன் பிரகத்தன் என்பவரை பாட்டுடை தலைவனாக கொண்டு பாடப்பட்டிருக்கிறது.இந்த நூல் 261 அடிகளைக் கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | குறிஞ்சிப்பாட்டு |
நூலாசிரியர் | குறிஞ்சி கபிலர் |
பாட்டுடைத் தலைவன் | ஆரிய அரசன் பிரகத்தன் |
பாடல் அடி | 261 |
பா வகை | ஆசிரியப்பா |
பட்டினப்பாலை
இந்த நூலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவர்.இந்த நூல் இருக்கு சோழன் கரிகாலன் பாட்டோட தலைவனாக கொண்டு பாடப்பட்டிருக்கிறது. இந்த நூல் 301 அடிகளைக் கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | பட்டினப்பாலை |
நூலாசிரியர் | கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
பாட்டுடைத் தலைவன் | சோழன் கரிகாலன் |
பாடல் அடி | 301 |
பா வகை | ஆசிரியப்பா,வஞ்சிப்பா |
மலைபடுகடாம்
பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இதுதான்.இந்த நூலை இயற்றியவர் பெருங்கௌசிகனார்.இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன்.இந்த நூல் 583 அடிகளை கொண்டிருக்கிறது.
நூல் பெயர் | மலைபடுகடாம் |
நூலாசிரியர் | பெருங்கௌசிகனார் |
பாட்டுடைத் தலைவன் | நன்னன் சேய் நன்னன் |
பாடல் அடி | 583 |
பா வகை | ஆசிரியப்பா |
இதையும் படிக்கலாமே..
பெரியார் வாழ்க்கை வரலாறு | Periyar History in Tamil |
தீபாவளி பண்டிகை வரலாறு | History of Diwali in Tamil |
மாணிக்கவாசகர் வரலாறு | Manikkavasagar History in Tamil |