Peepal Tree In Tamil | அரச மரம் பயன்கள்
Peepal Tree In Tamil:வணக்கம் நண்பர்களே.!! நம் நாட்டில் நம் ஊரில் அரசமரம் என்பது கண்டிப்பாக ஒரு இடத்தில் இருக்கும். அரச மரத்தை வீட்டில் வளர்க்கலாமா அரச மரத்தில் உள்ள பயன்கள் அரச மரத்தின் பழத்தில் உள்ள பயன்கள் மற்றும் அரச மரத்தை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரும்பாலும் அரச மரத்திற்கு கீழ் விநாயகர் சிலை இருக்கும். அரசமரம் என்றாலே அங்கு ஒரு விநாயகர் சிலை இருக்கும்.
அரச மரம்
அரச மரம் in english:Peepal Tree
அரசமரம் பொதுவாக ஒவ்வொரு ஊர்களிலும் கண்டிப்பாக இருக்கும் அல்லது ஆற்றங்கரையில் இந்த மரம் இருக்கும். அரச மரமும் ஆலமரம் போல் மிகவும் பெரிதாக வளரும். அரச மரத்தின் பழம் மிகவும் சிறிதாக இருக்கும் ஆனால் அந்த பழத்தில் ஏராளமான விதைகள் உள்ளது.
அரச மரம் பயன்கள்
அரச மரத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் காற்றை அரசமரம் அதிக அளவில் வெளியிடுகிறது அதனால் தினமும் காலையில் அரச மரத்தின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு மிகவும் சிறந்தது.திருமணம் ஆகி ரொம்ப நாட்களாக கர்ப்பம் பெறாமல் இருக்கும் பெண்கள் அரசமரத்தை சுற்றி வந்தால் அரச மரத்தில் உள்ள ஆற்றல் மூலம் பெண்களுக்கு கர்ப்பம் ஆவதற்கான ஆற்றலை கொடுக்கிறது.அரச பட்டையை கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் இருக்கும் குடல் புண்கள் நீங்கும். பெரியவர்களும் இதை குடிக்கலாம் பெரியவர்களுக்கு மலச்சிக்கல் நீங்கும்,உடல் சூடு இருந்தால் சூடு தணியும்,கருப்பை வளர்ச்சியை இது கொடுக்கும்.
அரச மரம் இலை
அரசமர இலையிலும் மருத்துவக் குணங்கள் நிறைவே இருக்கிறது அரச மர இலையை அரைத்து குடித்து வந்தால் குடல் புண்கள் நீங்கும்.அரச மர இலையின் கொழுந்தை எடுத்து அதை நன்கு அரைத்து எருமை தயிர் உடன் சேர்த்து தினமும் காலையில் பெண்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான மலட்டுத்தன்மை நீங்கும்.இது மட்டும் இல்லாமல் ஆண்களுக்கு ஆண்மை தன்மையும் பெண்களுக்கு பெண்மை தன்மையும் இந்த அரச மர இலை கொடுக்கும்.மனிதர்களின் சிறுநீரில் வரும் பிரச்சினைகளை இது சரி செய்யும்.
அரச மரம் வீட்டில் வளர்க்கலாமா
அரசமரம் மிகவும் நன்மை தரக்கூடிய மரம் ஆனால் அதை வீட்டில் வளர்க்க கூடாது. அரச மரத்தை கோவில் பகுதிகளில் தான் வளர்க்க வேண்டும் குடும்பம் நடக்கும் வீடுகளில் அரச மரத்தை வளர்க்க கூடாது.
அரச மரம் விதை
அரச மரத்தில் இருக்கும் பழங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.அரச மரத்தில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடைந்து குழந்தை பிறப்பதை எளிதாக ஆகிவிடும் .ஆண்கள் மற்றும் பெண்கள் உடம்பில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.
Read Also: