பெரிய பாம்பு கனவில் வந்தால் | Periya pambu kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும் போது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும் அந்த கனவில் பாம்பு போவது பாம்பு துரத்துவது பாம்பு கடிப்பது ராஜ நாகம் நல்ல பாம்பு போன்றவை நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பெரிய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
பெரிய பாம்பு நம் கனவில் வந்தால் நமக்கு வாழ்வில் மிகப்பெரிய நல்ல காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் தொழில் அல்லது வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.உங்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஒரு நல்ல செய்தி வரும்.
நிறைய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
நிறைய பாம்பு கனவில் வந்தால் உங்கள் எதிரிகளிடம் இருந்து வரும் தொல்லைகள் குறைந்து நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். இனிமேல் வாழ்வில் உங்கள் எதிரிகளிடம் இருந்து எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது உங்கள் செயலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
ராஜநாகம் கனவில் வந்தால்
ராஜநாகம் உங்கள் கனவில் வந்தால் உங்களின் எதிரி மிகவும் நஞ்சு தன்மையுடன் உங்களை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதனால் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
கருப்பு நாகம் கனவில் வந்தால்
கருப்பநாகம் கனவில் வந்தால் உங்களின் எதிரி உங்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம் அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.உங்களின் எதிரி உங்களுக்கு மரணம் பயணத்தை காட்டுவது மற்றும் அவர்கள் உங்களுக்கு வீண் விரைய செலவு ஏற்படுத்தி விடுவார்கள்.நீங்கள் மிகவும் மன கஷ்டத்துடன் இருப்பீர்கள் அதனால் நீங்கள் தெய்வங்களை வேண்டுவது நல்லது.நீங்கள் வாகனத்தில் எங்கே ஏதும் செல்வதாக இருந்தால் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால்
பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால் உங்கள் கஷ்ட காலங்கள் நீங்கி உங்களுக்கு சந்தோசங்கள் ஏற்படும். உங்களுக்கு கூடிய விரைவில் நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு செயல் நடக்க இருக்கிறது என்று அர்த்தம்.
பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால்
பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால் உங்களை துரத்தி வந்த பிரச்சனைகள் தானாகவே நீங்கி நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்