Homeதமிழ்பெரியார் வாழ்க்கை வரலாறு | Periyar History in Tamil

பெரியார் வாழ்க்கை வரலாறு | Periyar History in Tamil

பெரியார் வாழ்க்கை வரலாறு | Periyar History in Tamil

பெரியார் ஈ வெ ராமசாமி என்று அழைக்கப்படும் ஈ.வெ.ரா தந்தை பெரியார் என்றும் அழைக்கப்படுவார்.இவர் திராவிட சமூக சீர்திருத்தவாதி அது மட்டுமில்லாமல் திராவிட இயக்கம் சுயமரியாதை இயக்கம் போன்றவற்றை நிறுவி இருக்கின்றார்.

- Advertisement -

இவர் மக்கள் தமது சமுதாயத்தை பரிபூரணமாக சீர்திருத்தம் அவசர தேவையாக இருக்கிறது என்பதனை உணர வேண்டும் என்று விரும்பி உள்ளார்.அரசு அரசியல் கட்சிகள் மக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

அது மட்டும் இல்லாமல் இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும் சாதியை ஒழிப்பதற்காகவும் மூடநம்பிக்கையை அகற்றுவதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் இவர் போராடி வந்தார்.தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிட கழகத்தினை நிறுவினார்.இவர் சுயமரியாதை இயக்கமும் பகுத்தறிவாதமும் மிகவும் புகழ்பெற்று விளங்கியது.

இவருடைய வசதியான முற்பட்ட சாதியாக கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் இவர் பிறந்திருந்தாலும் சாதிக் கொடுமை தீண்டாமை மூடநம்பிக்கை வருணாசிரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம் பெண்களை தாழ்வாக நடத்துவது போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்.

இந்த மனநிலை வளர காரணமாக இருந்தவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும் அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும் கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதனை கருத்தில் கொண்டு தீவிரமாக இறங்கினார்.

- Advertisement -

மேலும் இவருடைய பகுத்தறிவு சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூக பரப்பிலும் தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.இவர் ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி என்ற பெயர்களிலும் தந்தை பெரியார் வைக்கம் வீரர் என்ற பட்டங்களிலும் அறியப்பட்டார்.

பெரியார் வரலாறு

பெரியார் பிறந்த நாள்,ஊர்

பெரியார் அவர்கள் செப்டம்பர் 17ஆம் தேதி 1879 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார் இவருடைய தந்தை பெயர் வெங்கட்ட நாயக்கர் தாயார் பெயர் சின்னதாயம்மை இவருடைய இயற்பெயர் ஈரோடு வெங்கட ராமசாமி நாயக்கர்.இவருடன் பிறந்தவர்கள் இரண்டு பெயர் கிருஷ்ணசாமி என்ற சகோதரனும் கண்ணம்மா மற்றும் பொண்ணு தாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருக்கின்றனர்.

- Advertisement -

இவர் ஒரு வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் தந்தை பெரியார் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்தார்.மேலும் இவருக்கு 19 வயதில் திருமணம் செய்யப்பட்டது.இவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆனால் அந்த குழந்தை ஐந்து மாதங்களில் இறந்து விட்டது.

மேலும் இவர் இன பாகுபாடு வேற்றுமை எதுவும் இல்லாமல் அனைவருடனும் சரிசமமாக பேசி வருவார் கலப்பு திருமணம் 1902 ஆம் ஆண்டு செய்து கொண்டார் இதில் இவருடைய பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால் அவர்களுடன் சண்டை செய்துவிட்டு தனியாக சென்றார்.

பெரியார் வரலாறு

பெரியார் அவர்களுக்கு காந்தியின் கொள்கைகளில் அதிகம் ஈடுபாடு இருந்ததால் 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதில் நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

பிறகு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக 1922 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் பெரியார் அரசு பணியில் கல்வியிலும் இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை எடுத்தார்.இந்த கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காத நாள் காங்கிரஸ் கட்சியை விட்டு 1925 ஆம் ஆண்டு விலகினார்.

வைக்கம் என்னும் ஊர் கேரளாவில் இருக்கின்றது.அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து போராட்டம் நடத்தி பெரியார் சிறை சென்றார் இந்த போராட்டத்தில் பெரியாரை வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்கள்.

மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை போக்குவதற்காக 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் மற்றும் குடியரசு நாளிதழை தொடங்கி வைத்தார்.இது மட்டுமில்லாமல் மாநாடு கூட்டங்கள் போன்றவற்றை நடத்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

பெரியார் வரலாறு

பெரியார் பொன்மொழிகள்

  • ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.
  • கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்க கூடாது.
  • பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்.
  • பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இழந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேறி விடும்.
  • தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் சாதி ஒழிய வேண்டும் மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்.
  • எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை எங்கே விழுங்கியது என்று தான் பார்க்க வேண்டும்.

பெரியார் சிறப்பு பெயர்கள்

  • ஈ.வெ.ரா
  • ஈ.வெ.ராமசாமி 
  • தந்தை பெரியார்
  • வைக்கம் வீரர்

பெரியார் சொற்பொழிவுகள்

பெரியார் அவர்கள் அண்ணாதுரை இடம் விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை நிறுவினார்.1962 ஆம் ஆண்டு கி வீரமணி என்பவரே திராவிட கழகத்தின் பொதுச் செயலாளராக நியமித்தார்.வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் தந்தை பெரியாருக்கு அமைச்சர் திரிகுனா சென் அவர்கள் 1973 ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கியது.

மேலும் சாதி பாகுபாடு மூடநம்பிக்கை போன்றவற்றை அடியோடு வெறுக்க வேண்டும் என்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் அவர்கள் கூறினார்.அதுவே பெரியாரின் கடைசி வார்த்தையாகும் கூட்டமாகும்.

பெரியார் வரலாறு

பெரியார் இறப்பு

சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்பட்டார்.பெரியார் இவருடைய 94 வது வயதில் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இவ்வுலகை விட்டு சென்றார்.வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பெரியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெரியாரின் நினைவை போற்றும் வகையில் ஈரோடு இல்லத்தை பெரியார் அண்ணா நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.தமிழ்நாட்டில் இவருக்கு முன் அல்லது பின் ஒரு சீர்திருத்த செம்மல் தோன்றியது இல்லை என்று கூட சொல்லலாம்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR