தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அஜித் விஜய் தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் தூண்களாக இருக்கிறார்கள் இவர்களில் படங்கள் வெளியானால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சி அளிக்கும் அந்த அளவுக்கு இவர்களின் படம் வெளியானால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சென்று ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதை அடுத்து அவர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க சென்றார். அப்பொழுது விஜய் சென்ற கார் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றதால் அவருக்கு 500 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஏற்கனவே தனது காரில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டியதால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.