பொன்னாங்கண்ணி கீரை | Ponnanganni Keerai benefits in Tamil
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பொன்னாங்கண்ணி கீரையின் பயங்களை பற்றி பார்க்க இருக்கிறோம்.இந்த பொன்னாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும்.நமது உடலில் தேவையான சத்துக்கள் பல இருக்கின்றது அன்றாடம் சாப்பிடும் உணவில் மூலமாக அந்த சத்துக்கள் கிடைக்கின்றது.ஆனால் நான் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது.
குழந்தைகள்,பருவம் அடைந்த பெண்கள்,ஆண்கள்,நடுத்தர வயதான,முதியோர் அனைவரும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.அதில் ஒன்று கீரை வகைகள் கீரை வகைகளில் மிகவும் சிறந்தது என்றால் பொன்னாங்கண்ணிக் கீரை என்று கூறுவார்கள்.இதுதான் தங்கமான நிறத்தை சருமத்திற்கு தருகின்றது.இதனுடைய மருத்துவ பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
பொன்னாங்கண்ணி கீரை வகைகள்
- நாட்டு பொன்னாங்கண்ணி
- சீமை பொன்னாங்கண்ணி
பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்
உடல் எடை குறைய
உடல் எடை குறைக்க டயட் அவசியமாக இருக்கிறது.இதற்கு பொன்னாங்கண்ணி கீரையும் உதவியாக இருக்கிறது.பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
உடல் எடை அதிகரிக்க
பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரித்துக் கொள்ள முடியும்.பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம்,பருப்பு நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் எலும்புகளும் உறுதியாக இருக்கும்.
வாய் துர்நாற்றம்
வாயிலிருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமைந்திருக்கிறது.பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
சுறுசுறுப்பாக செயல்படுதல்
பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் இதயம் மற்றும் மூளை புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும்.
நோய்களை குணப்படுத்தும்
பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் மூல நோய் மற்றும் மண்ணீரல் போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மையை கொண்டது.
கண் பார்வை
பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பகலிலும் இரவிலும் நல்ல கண் பார்வை தெரியும்.கண் தெரியாதவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு இருந்தால் கண் பார்வை தெரியும்.
ரத்தம் சுத்தம்
பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக நீரில் கழுவி சிறிது சிறிதாக வெட்டி அதனுடன் பாசிப்பருப்பு சின்ன வெங்காயம் சீரகம் பூண்டு மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
கண் எரிச்சல்
இரவில் சரியாக தூக்கம் இல்லாததால் நீண்ட நேரம் செல்போன் கணினி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பார்ப்பதால் கண் எரிச்சல் ஏற்படும். இதற்கு பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் உடனடி நீங்கிவிடும்.
இதையும் படிக்கலாமே..
துளசி பயன்கள் மற்றும் தீமைகள் | Thulasi Health Benefits |
கரிசலாங்கண்ணி பயன்கள் | Karisalankanni Benefits in Tamil |
முருங்கை கீரை சூப் பயன்கள் | Murungai Keerai Benefits | Murungai Keerai Soup |