புலி கனவில் வந்தால் என்ன பலன் | Puli Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.
கனவில் ஆடு,மாடு,நாய் போன்ற மிருகங்கள் வருவது வழக்கம் தான்.ஒரு சிலருக்கு காட்டில் வசிக்கும் சிங்கம்,புலி போன்ற மிருகங்கள் வரும் அப்படி காட்டில் வசிக்கும் மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
புலி கனவில் வந்தால் என்ன பலன்
புலி கனவில் வந்தால் கனவு காண்பவரிடம் பிறர் கடுமையாக நடந்து கொள்வது, பிறரைக் குறித்து பயம்,பிறரிடம் உணர்ச்சி வசம் படுதல்,நமது தைரியம் போன்றவற்றை இந்த கனவு உணர்த்துகிறது.
இறந்த புலி கனவில் வந்தால்
இறந்த புலி கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனை காலமாக இருக்கும். என்னதான் இப்போது பிரச்சனை காலமாக இருந்தாலும் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்து விடும். அப்படி ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் பிரச்சனைகளை முடிப்பதற்கு இது சரியான தருணம் ஆகும்.
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
புலியுடன் இருப்பது போல் கனவில் வந்தால்
புலியுடன் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு வாழ்வில் நல்லது நடப்பதற்காக அறிவுறுத்தும் கனவாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும். வேற யாருக்கும் தொந்தரவுகள் தராமல் தன் காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வார்கள்.
புலிக்குட்டிகளுடன் இருப்பது போல் கனவில் வந்தால்
புலிக்குட்டிகளுடன் நிற்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது அதாவது தனது அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வரப்போகிறது அதனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் இந்த கனவு உணர்த்துகிறது.
புலி தாக்குவது போல் கனவில் வந்தால்
புலி தாக்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்வில் ஒரு பாதுகாப்பற்ற நிலை வரப்போகிறது என்று அர்த்தம். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் அதிகமாக வரும்.
மேலும் கனவு பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நாய் கனவில் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் |
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் |