Homeதமிழ் கட்டுரைகள்ராகவேந்திரர் வரலாறு| Raghavendra History In Tamil

ராகவேந்திரர் வரலாறு| Raghavendra History In Tamil

ராகவேந்திரர் வரலாறு|Raghavendra History In Tamil

வணக்கம் நண்பர்களே.!!ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து மாகன் ஆவார். ராகவேந்திரா சுவாமிகளை விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். ராகவேந்திரா சுவாமிகளை பின்பற்றவர்கள்  ராகவேந்திரா சுவாமிகள் தனது பக்தர்களுக்கும் ஆசியும் அருளும் புரிந்து கொண்டே இருக்கின்றார் என்று நம்புகிறார்கள்.

- Advertisement -

இராகவேந்திர சுவாமிகள்

ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் கிபி 1595 அல்லது 1598 அல்லது 1601 இல் தமிழ்நாட்டு சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரியில் பிறந்தார். இவர் 16 நூற்றாண்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள மந்திராலயத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற இடத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் உயிருடன் ஜீவசமாதி நிலையை அடைந்தார்.

ராகவேந்திரர்  அவதாரம்

பிரம்மா தேவர்களுக்கு மலர்களை பறிப்பதற்கு நாள்தோறும் சங்கு கர்ணன் என்ற தேவன் பூலோகம் வருவது வழக்கம் அப்பொழுது அந்த மலர்களின் அழகில் ஈர்த்ததால் பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார்.

தேவன் மனதில் நினைத்ததை அறிந்து கொண்ட பிரம்ம தேவர் பூலோகத்தில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகனாக பிரகலாதனாய் பிறப்பதற்கு வரம் அளித்தார்.பிரகலாதன் மஹா விஷ்ணுவின் மீது இருந்த தீவிர பக்தியினால் அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்து நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார் பாஹ்லிகர் மஹாபாரதப் போரில்  பாண்டவர்களுக்கு எதிராக போரில் பங்கேற்றாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இந்தப் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார். த

- Advertisement -

ன் அடுத்த பிறவியில் வியாசாராராய் பிறந்து மத்வரின் தத்துவங்களை வழிபட்டு வந்தார்.இந்த பிறவியில் தான் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குரு ராகவேந்திரராக அவதரித்தார்.

Read Also

- Advertisement -
புத்தர் வாழ்க்கை வரலாறு
ராகவேந்திரர் வரலாறு| Raghavendra History In Tamil
ராகவேந்திரர் வரலாறு

ராகவேந்திரர் வரலாறு

வேங்கடநாதர் திரு திம்மண்ணா பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்கிற தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக வேங்கடநாதன் தமிழ்நாட்டில் சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரியில் பிறந்தார்.வேங்கடநாதர் சிறுவயதில் இருந்து நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தவர்.

அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் தன் அண்ணன் திருகுரு ராய பட்டரிடம் வளர்ந்தார். வேங்கடநாதர் தனது அடிப்படைக் கல்வியை மதுரையில் மைத்துனர் திரு லட்சுமி நரசிம்மா சாரியாரிடம் பயின்றார்.மதுரையில் கல்வி கற்ற வேங்கடாநாதர் சரஸ்வதி என்பவரை மணந்தார்.

திருமணத்திற்குப் பிறகு கும்பகோணத்தில் குடியேறினார் அங்கே அவர் ஸ்ரீ சுதேந்திர தீர்த்தாரிடம் தூவை வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் கற்றுக் கொண்டார். சொற்பொழிவு ஆற்றுவதில் மிகச் சிறந்தவராக விளங்கினார். சொற்பொழிவு ஆற்றும் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்.

- Advertisement -

வேங்கடநாதர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். வேங்கடாநாதர் எந்த ஒரு தட்சணையும் எதிர்பார்க்காமல் குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் வேதம் கற்பித்தார். இதனால் இவர் குடும்பம் வறுமையில் வாடியது வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர்.

என்னதான் வறுமையில் வாடினாலும் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை துளி கூட குறையவில்லை. ஒருமுறை வேங்கடநாதரை குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். வேங்கடாநாதரை அழைத்தவர்கள் சரியாக நடத்தவில்லை. அழைத்தவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேங்கடநாதரை வேலை வாங்குவதற்காக சந்தனம் அரைத்து தர சொன்னார்.

அவர் அரைத்து தந்த சந்தனம் விருந்தினர்கள் உடல் முழுவதும் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது அவ்வாறு பூசி கொண்ட விருந்தினருக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டது. அப்பொழுது வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும் போது அக்னி சூக்தம் என்ற ஸ்தோத்திரத்தை சபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இவ்வாறு கூறிய வேங்கடநாதரை வருண மந்திரத்தை ஜெபித்து விருந்தினர்க்கு இருந்த எரிச்சலை போக்கினார். அதன் பிறகு வேங்கடநாதரை அழைத்தவர்கள் தான் செய்த தவறை உணர்ந்து அவரிடம் மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டு வேங்கடநாதரை கௌரவித்து அனுப்பினார்.

இவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

ஆதித்த கரிகாலன் வரலாறு
ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம்
திருவள்ளுவர் பற்றிய முழு விவரம்
ராமானுஜர் வரலாறு தமிழில்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR