ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது | Rahu Ketu Dosham in Tamil
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் ராகு கேது தோஷம் பற்றி பார்க்க இருக்கிறோம்.நிழல் கிரகங்கள் சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் பெரும்பாலும் கெடுபலன்களை மட்டும் தரக்கூடியது என்று கூறுவார்கள்.குழந்தை பாக்கியத்தை தரக்கூடியவர்களே ராகு கேது இருக்கும் பொழுது குழந்தை பேரு குறைக்க ராகு கேது தோஷம் தான் காரணம் என்று சொல்வது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
நிழல் கிரகங்கள் சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் பெரும்பாலும் பெரும்பலங்களை மட்டும் தரும்.பறவைகள் பசியாற சிறு தானியங்களை ஒரு கிண்ணத்தில் வைத்து அவற்றிற்கான தாகத்தை போக்க தண்ணீர் போன்றவை ஏற்படுத்தி வீட்டின் வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் கட்டி வைத்தால் சிறு பறவையின் சந்தோஷத்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்றும் நம்புகின்றனர்.
Rahu Kethu Dhosam Endral Enna
உங்கள் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் அதற்கு உடனடியாக பரிகாரம் செய்ய வேண்டும் ராகு கேது தோஷத்தின் நிவர்த்தி செய்வதின் மூலம் காலதாமதம் ஏற்பட்டால் வாழ்க்கை பாழாகிவிடும்.ராகு கேது ஒன்றரை வருடத்தில் பெயர்ச்சி ஆகிவிடும்.இந்த ராகு கேது கிரகங்கள் பெயர்ச்சியினால் சில சமயம் சிறந்த பலன்களும் சில சமயம் கெட்ட பலன்களும் ஏற்படுத்தக் கூடியது.ராகு கேது தோஷம் மற்றும் ஜாதகத்தில் ராகு கேது பலவீனமாக இருப்பவர்களுக்கு சில அறிகுறிகள் இந்த பதிவில் இருக்கின்றது.அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம்.
ராகு கேது (Rahu kethu dhosam) பலவீனமாக இருப்பதற்கான அறிகுறி
ஜாதக லக்னத்தில் ராகு பெயர்ச்சியினால் பாதகமான பலன்களை சந்திக்கும் பொழுது ராகு கேது தோஷங்கள் உள்ள ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும் என்றும்.இதனால் குடும்பத்தில் உயிரிழப்பு,ஒரு வழக்கில் சிக்கிக் கொள்ளுதல்,திருட்டு சம்பவம்,மன நோய் மற்றும் உடல் நலம் தொடர்பான தீவிரமான பிரச்சனைகள் ஏற்படும்.ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால் புகழ்,அங்கீகாரம் கிடைக்கும்.
ஜாதக லக்னத்தில் கேது பெயர்ச்சியினால் பாதகமாக இருக்கும் கணையம் தொடர்பான பிரச்சனைகள்,காது தொடர்பான பிரச்சனைகள்,நுரையீரல் மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உடலில் தீராத பிரச்சனைகள் ஏற்படும்.மேலும் உறவினர்களிடம் பிரச்சினைகளையும்,துன்பங்களையும் ஏற்படுத்தும்.
Palani Murugan Alankaram | பழனி முருகன் அலங்காரம் வகைகள் நேரம் |
ராகு கேது தோஷம்(Rahu Kethu Dhosam)பரிகாரம்
செவ்வாய் தோஷத்திற்கு நாம் லக்னம் மற்றும் ராசி இரண்டுமே பார்க்க வேண்டும்.ஆனால் ராகு கேது தோஷத்திற்கு லக்னத்தை மட்டும் பார்க்க வேண்டும் ராசியை விடுத்து லக்கினத்தை மட்டும் வைத்துக்கொண்டு பார்ப்பார்கள்.காரணம் ராகு கேது தோஷத்தை ராசிக்கும் சேர்த்து பார்த்தால் இந்த உலகத்தில் ஒருவர் கூட இந்த தோஷம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.அதனால் திட்டமிட்டு இந்த தோஷத்தை லக்கினத்திற்கு மட்டுமே கணக்கிடுகிறார்கள்.இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் ராகு கேது தோஷம் என்பது உண்மையில் தோஷம் தராது சந்தோஷத்தை மட்டுமே தரும் இதுதான் உண்மை.
ராகு கேது தோஷம் குழந்தை பாக்கியத்தை தரக்கூடியது.குழந்தை பேரு குறைக்க ராகு கேது தோஷம் தான் காரணம் என்று சொன்னால் ஆச்சரியமாக தான் இருக்கிறது.அதனால் ராகு கேது தோஷம் பற்றி கவலைப்பட தேவையில்லை.அப்படி தோஷம் இருந்தாள் அதற்கு பரிகாரம் செய்ய நினைத்தால் மேலே கூறிய போன்று பறவைகள் ஆதரவற்ற மனிதர்கள் விலங்குகளுக்கு உணவளித்தால் மட்டுமே போதுமானது.
ராகு கேது(Rahu kethu dhosam)தீமை தரும் வீடுகள்
ஏழாம் வீடு
ராகு கேது ஏழாம் இடத்தில் இருந்தால் திருமண தடை ஏற்படும்.அந்த ஜாதகக்காரரின் வளர்ச்சியை தடுக்க உதவியாக இருக்கும்.ஏழாம் இடத்தில் ராகு கேது இருந்தாள் வாழ்க்கை துணை சரியாக புரிந்து கொள்ள முடியாதவராகவும் எதிர்வினை ஆற்றுபவராகவும் குடும்பத்தோடு இணைந்து கொள்ள முடியாதவராகவும் இருப்பார்கள்.மேலும் அந்த ஜாதகக்காரரை தவறான வழிக்கு கூட்டிச் செல்லும் என்றும் கூறுகின்றனர்.
இரண்டாம் வீடு
ராகு கேது இரண்டாம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகக்காரரின் குடும்பத்தில் நிம்மதி இருக்காது,பண பிரச்சினைகள் அதிகரிக்கும்,குடும்பம் விருத்தி அடைவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.ராகு கேது எட்டாம் இடத்தில் இருந்தால் கணவன் மனைவிக்கு ஆபத்துக்கள் ஏற்படும்.மேலும் அவமானங்கள் உண்டாகும்,நிம்மதியற்ற வாழ்க்கை உண்டாகும் என்றும் கூறுகின்றனர்.
ஐந்தாம் வீடு
ராகு கேது ஐந்தாம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகக்காரர்களுக்கு புத்திர பாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படும்.ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் இல்லாமலும் போய்விடும்.
ராகு கேது(Rahu kethu dhosam)நன்மை தரும் வீடுகள்
மூன்றாம் வீடு
ராகு கேது மூன்றாம் இடத்தில் இருந்தால் மிகவும் நல்ல பலனைத் தரும். அந்தச் ஜாதகக்காரருக்கு பலமாகவும் வலிமையாகவும் இருப்பார்கள். ராகுவும் கேதுவும் ஒரே இடத்தில் இருந்தால் மகிழ்ச்சியை தரும்.
ஆறாம் வீடு
ராகு கேது ஆறாம் இடத்தில் இருந்தால் எதிரிகள் நோய் ஸ்தானமான பிரச்சனைகள் ஏற்படாது.அந்த ஜாதகக்காரர்களுக்கு இருக்கும் எதிரிகள் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.மேலும் நல்ல ஆற்றல் மற்றும் வெற்றியை பெறுவார்கள்.
பத்தாம் வீடு
ராகு கேது பத்தாம் இடத்தில் இருந்தால் கர்ம ஸ்தானத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.அதாவது அந்த ஜாதகக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.
பதினோராவது வீடு
ராகு கேது 11 வது இடத்தில் இருந்தால் மூத்த சகோதரர் லாப ஸ்தானத்தில் இருப்பதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.அந்த ஜாதகக்காரர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படாது.அதுமட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் செலவு,தான தர்மங்கள்,கொடை செல்வம்,இரட்டிப்பாக திரும்பும் நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே..
முருகன் 1008 பெயர்கள் தமிழ் | Murugan 1008 Names in Tamil |
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
வலது கண் துடித்தால் என்ன பலன் | Valathu Kan Thudithal |