ரஜினி வாழ்க்கை வரலாறு|Rajinikanth History In Tamil
வணக்கம் நண்பர்களே.!!ரஜினிகாந்த் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது தமிழகத்தில் இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் கூட ரஜினிகாந்த் என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு இவர் படங்கள் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது குறிப்பாக சொல்லப்போனால் ரஜினிகாந்துக்கு இந்தியாவை தாண்டி ஜப்பானில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
Rajinikanth Birthday In Tamil
டிசம்பர் 12 1950 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் வருட வருடம் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம்
ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனராக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாடகத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி தமிழ்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் மலையாள மொழிகளில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்தர்.ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் இந்தியா திரைப்பட நடிகர்.2007 ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்கு 26 கோடி சம்பளம் வாங்கினார் ஆசிய அளவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவார்.
6 முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளை பெற்றார். ரஜினிகாந்த் நடிகராக மட்டும் நடிக்காமல் சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும்,திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.ரஜினிகாந்தின் ரசிகர்கள் தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.
ரஜினி வாழ்க்கை வரலாறு
ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும்,ரமாபாய்க்கும் நான்காவது மகனாக பிறந்தார்.ரஜினிகாந்த் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர். ரஜினிகாந்தின் தந்தை காவலராக பணி புரிந்தார். ரஜினிகாந்துக்கு 9 வயது இருக்கும் பொழுது ரஜினிகாந்தின் தாயார் ரமாபாய் இறந்தார்.
ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள ஆசாரியா பாடசாலை மற்றும் விவேகானந்தா பாலக சங்கம் ஆகியவற்றில் தனது படிப்பை முடித்தார் படிப்பு முடித்த பிறகு சிவாசி அலுவலகத்தில் உதவியாளராகவும் தச்சாளராகவும் வேலை பார்த்தார்.அது மட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் மூட்டை தூக்கும் வேலையும் பார்த்தார்.
அதன் பிறகு பெங்களூர் போக்குவரத்து சேவை தேர்வு எழுதி நடத்துனர் உரிமம் பெற்று 1970 ஆம் ஆண்டு பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றினார்.
போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நாடகத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.இயக்குனர் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.அதன்பின் பல திரைப்படங்களை நடித்திருந்தார்.
ரஜினி புதிய படம்
நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,மீனா,குஷ்பூ,சூரி,பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தனர்.இந்தத் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று இது ஒரு ஆவரேஜ் படமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அமைந்தது.
அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வியை சரிகட்ட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.
Read Also:
பாரதியார் பற்றிய முழு விவரம் |
ரஜினி படங்கள் லிஸ்ட்
நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் படம் அபூர்வ ராகங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது வரை தமிழில் மட்டும் 110 படங்கள் நடித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி வாழ்க்கை வரலாறு
வ எண் | Movie – படம் | ஆண்டு |
1 | அபூர்வ ராகங்கள் | 1975 |
2 | மூன்று முடிச்சு | 1976 |
3 | அவர்கள் | 1977 |
4 | கவிக்குயில் | 1977 |
5 | ரகுபதி ராகவ ராஜாராம் | 1977 |
6 | புவனா ஒரு கேள்விக்குறி | 1977 |
7 | 16 வயதினிலே | 1977 |
8 | ஆடு புலி ஆட்டம் | 1977 |
9 | காயத்ரி | 1977 |
10 | ஆறு புஷ்பங்கள் | 1977 |
11 | சங்கர் சலீம் சைமன் | 1978 |
12 | ஆயிரம் ஜென்மங்கள் | 1978 |
13 | மாங்குடி மைனர் | 1978 |
14 | பைரவி | 1978 |
15 | இளமை ஊஞ்சலாடுகிறது | 1978 |
16 | சதுரங்கம் | 1978 |
17 | வணக்கத்திற்குரிய காதலியே | 1978 |
18 | முள்ளும் மலரும் | 1978 |
19 | இறைவன் கொடுத்த வரம் | 1978 |
20 | தப்புத்தாளங்கள் | 1978 |
21 | அவள் அப்படித்தான் | 1978 |
22 | தாய் மீது சத்தியம் | 1978 |
23 | என் கேள்விக்கென்ன பதில் | 1978 |
24 | ஜஸ்டிஸ் கோபிநாத் | 1978 |
25 | பிரியா | 1978 |
26 | குப்பத்து ராஜா | 1979 |
27 | நினைத்தாலே இனிக்கும் | 1979 |
28 | அலாவுதீனும் அற்புத விளக்கும் | 1979 |
29 | தர்மயுத்தம் | 1979 |
30 | நான் வாழவைப்பேன் | 1979 |
31 | ஆறிலிருந்து அறுபது வரை | 1979 |
32 | அன்னை ஓர் ஆலயம் | 1979 |
33 | பில்லா | 1980 |
34 | அன்புக்கு நான் அடிமை | 1980 |
35 | காளி | 1980 |
36 | நான் போட்ட சவால் | 1980 |
37 | ஜானி | 1980 |
38 | எல்லாம் உன் கைராசி | 1980 |
39 | பொல்லாதவன் | 1980 |
40 | முரட்டுக் காளை | 1980 |
41 | தீ | 1981 |
42 | கழுகு | 1981 |
43 | தில்லு முல்லு | 1981 |
44 | கர்ஜனை | 1981 |
45 | நெற்றிக்கண் | 1981 |
46 | ராணுவ வீரன் | 1981 |
47 | போக்கிரி ராஜா | 1982 |
48 | தனிக்காட்டு ராஜா | 1982 |
49 | ரங்கா | 1982 |
50 | புதுக்கவிதை | 1982 |
51 | எங்கேயோ கேட்ட குரல் | 1982 |
52 | மூன்று முகம் | 1982 |
53 | பாயும் புலி | 1983 |
54 | துடிக்கும் கரங்கள் | 1983 |
55 | தாய் வீடு | 1983 |
56 | சிவப்பு சூரியன் | 1983 |
57 | அடுத்த வாரிசு | 1983 |
58 | தங்கமகன் | 1983 |
59 | நான் மகான் அல்ல | 1984 |
60 | தம்பிக்கு எந்த ஊரு | 1984 |
61 | கை கொடுக்கும் கை | 1984 |
62 | அன்புள்ள ரஜினிகாந்த் | 1984 |
63 | நல்லவனுக்கு நல்லவன் | 1984 |
64 | நான் சிவப்பு மனிதன் | 1985 |
65 | உன் கண்ணில் நீர் வழிந்தால் | 1985 |
66 | ஸ்ரீ ராகவேந்திரா | 1985 |
67 | படிக்காதவன் | 1985 |
68 | மிஸ்டர் பாரத் | 1986 |
69 | நான் அடிமை இல்லை | 1986 |
70 | விடுதலை | 1986 |
71 | மாவீரன் | 1986 |
72 | வேலைக்காரன் | 1987 |
73 | ஊர் காவலன் | 1987 |
74 | மனிதன் | 1987 |
75 | குரு சிஷ்யன் | 1988 |
76 | தர்மத்தின் தலைவன் | 1988 |
77 | கொடி பறக்குது | 1988 |
78 | ராஜாதி ராஜா | 1989 |
79 | சிவா | 1989 |
80 | ராஜா சின்ன ரோஜா | 1989 |
81 | மாப்பிள்ளை | 1989 |
82 | பணக்காரன் | 1989 |
83 | அதிசய பிறவி | 1990 |
84 | தர்மதுரை | 1991 |
85 | நாட்டுக்கு ஒரு நல்லவன் | 1991 |
86 | தளபதி | 1991 |
87 | மன்னன் | 1992 |
88 | அண்ணாமலை | 1992 |
89 | பாண்டியன் | 1992 |
90 | எஜமான் | 1993 |
91 | உழைப்பாளி | 1993 |
92 | வள்ளி | 1993 |
93 | வீரா | 1994 |
94 | பாட்ஷா | 1995 |
95 | முத்து | 1995 |
96 | அருணாச்சலம் | 1997 |
97 | படையப்பா | 1999 |
98 | பாபா | 2002 |
99 | சந்திரமுகி | 2005 |
100 | சிவாஜி | 2007 |
101 | குசேலன் | 2008 |
102 | எந்திரன் | 2010 |
103 | கோச்சடையான் | 2014 |
104 | லிங்கா | 2014 |
105 | கபாலி | 2016 |
106 | காலா | 2018 |
107 | 2.0 | 2018 |
108 | பேட்ட | 2019 |
109 | தர்பார் | 2020 |
110 | அண்ணாத்த | 2021 |
111 | ஜெயிலர் | படப்பிடிப்பில் |
Read Also:
ராமானுஜர் வரலாறு தமிழில் |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு |
வள்ளலார் வரலாறு |