Homeதமிழ்22 வருடங்களுக்கு பின் மீண்டும் அண்ணாமலையாரை தரிசித்த ரஜினிகாந்த்...

22 வருடங்களுக்கு பின் மீண்டும் அண்ணாமலையாரை தரிசித்த ரஜினிகாந்த்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.இவர் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயலலிதா என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள லால் சலாம் என்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்த வருகின்றார்.

மேலும் இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாண்டிச்சேரியில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் லால் சலாம் படக்குழு திருவண்ணாமலை வந்தடைந்துள்ளனர்.தற்பொழுது அங்கு சூட்டிங் நடந்து வரும் நிலையில் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் பெரிய அளவில் சூட்டிங் நடந்த இடத்தில் குவிந்து விட்டனர்.

- Advertisement -

Untitled design 2023 07 02T115224.969இதனால் அந்த இடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டு விட்டது பிறகு ரஜினிகாந்த் பார்த்த ரசிகர்கள் மனம் மகிழ்ச்சியில் அங்கிருந்து கலந்து சென்றார்கள்.இந்த இடத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு,தமன்னா,சுனில் வசந்த்,ரவி மற்றும் விநாயகர் இன்று மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பிற்கு நடுவே திருவண்ணாமலை உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் தரிசனம் செய்து உள்ளார் இதனால் அங்கு சிறிது நேரம் ரசிகர்கள் ஆர்ப்பரித்திருந்தனர்.

Untitled design 2023 07 02T115315.952இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் சனிப்பிரதோஷ தினத்தன்று சுமார் 22 ஆண்டுகள் பிறகு திருவண்ணாமலை திருக்கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து இருக்கின்றார்.ரஜினிகாந்த் இந்த கோவிலுக்கு வந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவரை சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருக்கோவிலில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினார்கள்.தொடர்ந்து திருக்கோவிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திருமஞ்சன கோபுரம் வழியாக தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR