தமிழ் நகைச்சுவை விடுகதைகள் | Riddles In Tamil With Answer
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்த விடுகதைகள் மற்றும் அதற்கான விடைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.ஒரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக விவரித்து சொல்லும் ஒரு புதிரே விடுகதையாகும்.இந்தப் புதரில் ஆயிரம் அர்த்தங்கள்,விஷயங்கள் மற்றும் கருத்துகள் அடங்கி உள்ளது.
நாம் பலரிடம் விடுகதை கேட்போம் அல்லது அதற்கு விடை கண்டுபிடித்து சொல்வோம் இதனால் அதிக ஆர்வம் நமக்கு வரும்.இதனால் நமக்கு பொழுது போக்காக இருக்கும் அது மட்டும் இல்லாமல் நமக்கு சிந்திக்கும் திறனையும் அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது.மேலும் விடுகதை மட்டும் விடைகளைப் பற்றி பார்ப்போம்.
தமிழ் புதிர்கள் மூளைக்கு வேலை
விடுகதை | விடை |
வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? | செருப்பு |
ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? | தென்னை |
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? | நிலா |
கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? | தையல்காரர் |
சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? | கொசு |
நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? | மணிக்கூடு |
விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? | தும்பிக்கை |
சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? | வாழைப்பழம் |
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? | வெங்காயம் |
தமிழ் புதிர்கள்
விடுகதை | விடை |
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? | சூரியன் |
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? | பட்டாசு |
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? | பூரி |
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? | வாழை மரம், வாழைத்தார் |
வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி. அவர்கள் யார்? | பூட்டும் சாவியும் |
காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன? | மதிய உணவு மற்றும் இரவு உணவு |
எந்த மாதத்தில் மக்கள் குறைவாக தூங்குவார்கள்? | பிப்ரவரி குறுகிய மாதம் |
ராமுவின் தாய்க்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். முதல் குழந்தைக்கு ஏப்ரல் என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது குழந்தைக்கு மே என்று பெயரிடப்பட்டது. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன? | ராமு |
நியூசிலாந்தில் வசிக்கும் ஒரு பெண்ணை ஆஸ்திரேலியாவில் ஏன் அடக்கம் செய்யக்கூடாது? | ஏனென்றால் அவள் உயிருடன் இருக்கிறாள் |
உடைத்தால் தான் உபயோகப்படுத்த முடியும் அது என்ன? | முட்டை |
நகைச்சுவை புதிர்கள்
விடுகதை | விடை |
எப்பொழுதும் நமக்கு முன்னால் இருக்கும் ஆனால் நம்மால் பார்க்க முடியாது அது என்ன? | எதிர்காலம் |
இளமையாக இருக்கும்போது உயரமாகவும், வயதாகும்போது குட்டையாக மாறும் அது என்ன? | மெழுகுவர்த்தி |
எத்தனை முறை திறந்து மூடினாலும் ஓசை வராத கதவு எது? | கண் இமை |
L என்ற எழுத்தில் தொடங்கி, R என்ற எழுத்தில் முடிவடையும், அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கும். அது என்ன? | Letter |
உங்கள் வலது கையில் நீங்கள் எளிதாகப் பிடிக்கக்கூடிய ஒன்று, ஆனால் இடது கையால் பிடிக்க முடியாது அது என்ன? | இடது கை |
பத்து பெண்கள் ஒரு சிறிய குடையின் கீழ் நின்றனர், அவர்கள் யாரும் நனையவில்லை. அது எப்படி? | மழை பெய்யவில்லை |
எது மேலும் கீழும் செல்கிறது ஆனால் ஒருபோதும் நகராது? | படிக்கட்டுகள் |
கோழியின் எந்தப் பகுதியில் அதிக இறகுகள் உள்ளன? | வெளிப்பகுதியில் |
ஒரு மனிதன் கடும் மழையில், எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வெளியே செல்கிறான். அவரது தலைமுடி ஈரமாகவில்லை? | அவருக்கு வழுக்கை |
எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? | செல்போன் |
தமிழ் புதிர்கள் விடைகளுடன்
விடுகதை | விடை |
அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டான் அவன் யார்? | பந்து |
கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்க முடியாது அது என்ன? | நிழல் |
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது என்ன? | விக்கல் |
முறையின்றி தொட்டால் ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? | மின்சாரம் |
பாலிலே புழு நெளியுது அது என்ன? | பாயாசம் |
கையில்லாமல் நீந்துவான் கால் இல்லாமல் ஓடுவான் அவன் யார்? | படகு |
உடம்பெல்லாம் துவாரம் இருந்தும் தண்ணீரை என்னுள் சேமித்து வைப்பேன் நான் யார்? | பஞ்சு |
பூ பூக்கும் காய் காய்க்கும் ஆனால் பழம் பழுக்காது அது என்ன? | தேங்காய் |
உள்ளே இருந்தால் ஓடித்திரிவான் வெளியே வந்தால் விரைவில் மடிவான் அவன் யார்? | மீன் |
முன்னால் போனால் எவரையும் காட்டும் முதுகை உரித்தால் எதையும் காட்டாது அது என்ன? | கண்ணாடி |
இதையும் படியுங்கள்..
Mokka Jokes in Tamil | தமிழ் ஜோக்ஸ் | Kadi jokes in Tamil