இப்பொழுது உள்ள காலத்தில் இளமையிலே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் நரைமுடி வந்து விடுகிறது அதனால் ஒரு சிலர் இதற்கு ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
ரசாயன கலந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நரைமுடி கருப்பாக தெரியும் இருந்தாலும் இது பிற்காலத்தில் முடியின் அடர்த்தி குறைந்து முடி கொட்டுவது வழுக்கை விழுவது மற்றும் உடலுக்கு பல பாதிப்புகளை கொடுக்கும் அதனால் இயற்கை முறையில் முடியை வலுப்படுத்தும் கருப்பாக இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேங்காய் எண்ணெய் எலுமிச்சம் பழத்தை வைத்து முடியை எப்படி கருப்பாக்குவது
நமக்கு எளிதில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் மட்டும் எலுமிச்சம் பழத்தை வைத்து நரை முடியை கருப்பாக மாற்றலாம் அதற்கு முதலில் தேங்காய் எண்ணெயை சூடு படுத்திக் கொள்ளவும் அதில் எலுமிச்சம்பழச் சாறை கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும்.எலுமிச்சம் பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை பயன்படுத்திக் கொண்டு வந்தால் முடி நன்கு வளர்ச்சி பெற்று கற்பாக மாறிவிடும்.
எலுமிச்சம் பழம் தேங்காய் எண்ணெயின் பயன்கள்
எலுமிச்சம் பழம் மற்றும் தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட கலவைகள் மூலம் நரை முடி கருப்பாவது மட்டும் இல்லாமல் பல நன்மைகள் இருக்கிறது அதாவது பொதுவாக பொடுகு என்பது தலையில் வந்து விடும்.பொடுகை போக்குவதற்கு நாம் பல ரசாயன கலந்த ஷாம்பு வைப் பயன்படுத்துவோம் அதன் மூலம் சிறிது காலம் பொடுகு போகும்.
ஆனால் மீண்டும் பொடுகு என்பது வந்துவிடும் அதனால் தொடர்ந்து இரசாயன கலந்த ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் நம் முடிக்கும் மற்றும் கண்களுக்கும் ஆபத்து வந்துவிடும் அதனால் ரசாயனம் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதை விட எலுமிச்சம்பழம் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயின் கலவையை பயன்படுத்தினால் பொடுகு என்பது படிப்படியாக குறைந்து விடும்.இது உடலுக்கு எந்த விதமான கேடுகளையும் தராது.
முடியை வளர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.எலுமிச்சம் பழம் மற்றும் தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட கலவையின் மூலம் நரை முடியை கருப்பாகுவது மற்றும் பொடுகு போக்குவது அது மட்டுமல்லாமல் முடியும் வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஒரு சிலருக்கு முடி வறட்சியாக இருக்கும் என்னதான் நம் தேங்காய் எண்ணையை அதிக அளவு தேய்த்தாலும் கொஞ்ச நேரம் கழித்து வறட்சியாக மாறிவிடும்.
வறட்சியாக தெரியாமல் இருப்பதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பலசாரை கலந்து வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தேய்த்து வந்தால் முடி வறட்சியாக இல்லாமல் பல பலவென இருக்கும்.