சாமை அரிசி மருத்துவ பயன்கள்
சிறுதானிய தாவரங்களில் ஒன்றாக இருக்கும் சாமை அரிசி.இந்த சாமை அரிசியானது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகின்றது.சாமை அரிசியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.இந்த சாமை அரிசியில் புரதச்சத்து,கொழுப்பு சத்து,தாது உப்பு,நார்ச்சத்து,மெக்னீசியம்,சோடியம்,பொட்டாசியம்,காப்பர்,மாங்கனிசு,துத்தநாகம்,மாவு சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு சத்து போன்ற அனைத்தும் இதில் இருக்கின்றது.மேலும் இந்த சாமியாருசியை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
சாமை அரிசி மருத்துவ பயன்கள்
சிறு தானியங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் புஞ்சை தாவரங்களில் சிறப்புக்குரிய தானியமாக கருதப்படுவதும் சாமை அரிசி.இதனுடைய மருத்துவ குணங்கள் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலுவடைய செய்கின்றது.
காய்ச்சலினால் ஏற்படும் நாக்கு வறட்சி போக்கும் வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும் ஆண்களின் இனப்பெருக்க அணுக்களுக்கான உற்பத்தியை அதிகரிக்கும் ஆண்மை குறைவை போக்கும்.சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றது.மற்ற சிறு தானியங்களை பொருத்தத்திலும் சாமை அரிசியில் அதிகம் இரும்பு சத்து இருக்கின்றது இதனால் ரத்த சோகையை வராமல் தடுக்கின்றது.சாமை அரிசியில் உடல் உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கின்றது.இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அரிசி அமைகின்றது.
சாமை அரிசி தீமைகள்
சாமை அரிசியினால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மேல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.உணவு பட்டியலில் கொஞ்சமாக கொஞ்சமாக அதிகப்படுத்துவது நன்மை.ஒவ்வாமை உடையவர்கள் அளவோடு சாப்பிட்டு கொள்ள வேண்டும்.
சாமை அரிசி சமைப்பது எப்படி
பெண்களுக்கு தேவையான பல சத்துக்களை சாமை அரிசி தருகின்றது இதனால் சுவையான மற்றும் விரைவாக தயாரிக்க கூடிய தக்காளி சாதம் தயாரிக்கும் முறையைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- சாமை அரிசி
- 3-தக்காளி
- 1-வெங்காயம்
- ¼-மிளகாய் தூள்
- 1-மஞ்சள் தூள்
- 1-பச்சை மிளகாய்
- 1-இஞ்சி பூண்டு விழுது
- கொத்தமல்லி
- கருவேப்பிலை
- ½-கடுகு
- ½-சீரகம்
- ½-சோம்பு
- 2-நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை:
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.சாமை அரிசியை நன்கு கலந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பிறகு ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சோம்பு ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும் பிறகு வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பிறகு பாதி வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.இவைகள் நன்றாக வதங்கிய பிறகு இரண்டரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.பிறகு கொதிவரும் பொழுது ஊற வைத்து இருக்கும் சாமை அரிசியை உடன் சேர்த்து கொள்ள வேண்டும்.நன்கு கொதித்து தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி போட்டு மூடி வைக்க வேண்டும்.பத்து நிமிடம் கழித்து கிளறி விட உதிரியாக சாமை தக்காளி சாதம் தயாராகிவிடும்.இதனை குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் சாப்பிடலாம்.
சாமை அரிசி பயன்கள்
சாமை அரிசியினால் ஏற்படும் பயன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
எலும்புகள் பிரச்சினை
சாமை அரிசியில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதனால் இந்த சாமி அரிசியை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.எலும்பு முறிவு உள்ளவர்கள் சாமை அரிசியை சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆண்மை குறைபாடு
திருமணம் செய்த பிறகு ஆண்களின் இனப்பெருக்க விந்தணுவை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த சாமை அரிசியில் இருக்கின்றது.இதன் மூலம் ஆண்மை குறைபாட்டையும் நீக்குவதோடு மட்டும் இல்லாமல் தாது பொருட்களை உடலில் அதிகரிக்க செய்ய உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
உடல் உறுதி
சாமை அரிசியில் அதிகம் இரும்புச் சத்துக்கள் இருப்பதனால் ரத்த சோக வியாதி இருப்பவர்கள்.இந்த சாமை அரிசியை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையும்.இதனைப் போல் இந்த சாமியார் அரிசி சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு உறுதியாகவும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.
சர்க்கரை நோய்
சாதாரண அரிசியைவிட சாமை அரிசியில் நார் சத்துக்கள் ஏழு மடங்கு அதிகம் இருக்கின்றது.இதன் காரணமாக உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் இந்த சாமை அரிசியை சமைத்து சாப்பிடுவதின் மூலம் சர்க்கரை அளவு குறைகின்றது.மேலும் ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை நோயை வராமல் தடுத்து நிறுத்துகிறது.
மலச்சிக்கல்
சாமி அரிசியை சாப்பிடுவதின் மூலம் மலச்சிக்கல் பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்.மேலும் சாமை அரிசியை சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு நன்மை
சளி ஆஸ்துமா நுரையீரல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் குழந்தைகளுக்கு சாமை அரிசி சரியான மருந்தாக இருக்கின்றது.இதில் உள்ள போலி அமிலம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாக்காமல் தடுக்கின்றது.இந்த சாமை அரிசியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதனால் குழந்தைகளுக்கு நல்ல உடல் வலிமையை தருகின்றது.
கொழுப்புச்சத்து
சாமை அரிசியில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருக்கிறது.இந்த சாமை அரிசியை நாம் சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.அதுமட்டுமில்லாமல் மாரடைப்பு வருவதை முற்றிலுமாக தடுக்க முடியும்.
சாமை அரிசி நன்மைகள்
இதயத்திற்கு நல்லது
சாமை அரிசியில் எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.இதன் மூலம் இதே நோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கின்றது.சாமை அரிசியில் வைட்டமின்கள் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் முக்கியமான தாதுக்கள் போன்ற கூறுகளை கொண்டிருப்பதனால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மையை தருகின்றது.
நீரிழிவு நோய்
சாமை அரிசியில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீட்டை கொண்டிருப்பதனால் நீரிழிவு நோய்க்கு எதிராக குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
செரிமான பிரச்சனை
சாமை அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் இது செரிமான பிரச்சனையை தடுக்க பயன்படுகின்றது.
உடல் சோர்வு
சாமை அரிசியை சாப்பிடுவதின் மூலம் உடல் சோர்வு வராமல் தடுக்கிறது.இது உடலில் இருக்கும் நச்சு தன்மையை நீக்க உதவியாக இருக்கிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்
சாமை அரிசியில் உண்ணக்கூடிய வடிவங்களில் டோகோபெரோல்ஸ்,டோக்கோட்ரியெனோல்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றது.
நோய் அதிகரிப்பு சத்தி
சாமை அரிசியில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கின்றது.