Homeஆன்மிகம்சமயபுரம் மாரியம்மன் வரலாறு | Samayapuram Mariamman History in Tamil

சமயபுரம் மாரியம்மன் வரலாறு | Samayapuram Mariamman History in Tamil

சமயபுரம் மாரியம்மன் வரலாறு | Samayapuram Mariamman History in Tamil

தமிழ்நாட்டில் அதிகம் இந்து கோயில்கள் இருக்கின்றது. அதிலும் மாரியம்மன் கோவில்கள் அதிகமாகவும் காணப்படுகிறது மாரியம்மன் கோவிலில் தலைமை கோயிலாக சமயபுரம் செல்லப்படுகின்றது. இங்கு திருவிழா தொடங்கிய பின்னால்தான் மற்ற மாரியம்மன் கோயில்களில் திருவிழா தொடங்கும் என்பது ஐதீகமாக இருக்கின்றது. சமயபுரம் மாரியம்மன் கோவில் என்றால் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வடகறையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கோவிலாகும்.

- Advertisement -

சமயபுரம் மாரியம்மன் சிறப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மாவாசை பௌர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டு வந்தால் உச்ச பலன் கிடைக்கும்.மேலும் இந்த கோவிலில் வழிபட்டால் ராகு கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்று பக்தர்களின் நம்பிக்கை என்பதனால் கிரக கோளாறுகளால் பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் வரலாறு

சமயபுரம் மாரியம்மன் சிலை

சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கும் மாரியம்மன் சிலையை எட்டு கைகளுடன் தலை மாலை கழுத்தில் சர்ப்பக் கொடையுடன் ஐந்து அசுரர்களின் தலைகளை தன்னுடைய காலால் மிதித்து தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் படி இருக்கின்றார்.பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே இருக்கும் தெப்பக்குளம் இந்த கோவிலின் தீர்த்த குளங்கள் ஆகும்.இந்தக் கோவிலின் தல மரம் வேப்பமரம் ஆகும்.

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் | Pambu Kanavil Vanthal

சமயபுரம் மாரியம்மன் வரலாறு

தமிழ்நாட்டில் இருக்கும் மாரியம்மன் கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும்.இது திருச்சிராப்பள்ளி வடக்கே காவிரியின் வடகறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கும் இடம் கண்ணனூர்.இது சோழ மன்னன் தன்னுடைய தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் ஒரு கோட்டையும் உண்டாக்கி கொடுத்த இடம் ஆகும்.பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பினால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்பு காடாக மாறிவிட்டது.அங்குதான் அம்மன் கோவில் உருவாகியது என்று நம்பப்படுகின்றது.

- Advertisement -

வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்து அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஜிஎஸ் சுவாமிகள் வைரவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்தி வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள் பிறகு மாரியம்மன் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்கு வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டு சென்றார்கள்.

சமயபுரம் மாரியம்மன் வரலாறு

- Advertisement -

அப்பொழுது காட்டு வழியாக சென்ற வழிப்போக்கர்கள் அந்த சிலையை பார்த்து அதிசய பட்டார்கள் பிறகு அக்கம் பக்கத்தில் இருந்து கிராமத்து மக்களை கூட்டி வந்து அதற்கு கண்ணனூர் மாரியம்மன் என்று பெயரிட்டு வழிபட்டு வந்தார்கள்.அந்த காலத்தில் விஜயநகர மன்னன் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்பொழுது கண்ணனூரில் முகாமிட்டிருந்தனர்.

அப்பொழுது அரண்மனை மேட்டில் இருந்து கண்ணனூர் மாரியம்மன் வழிபட்டு தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றதால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தனர்.அதன்படி அவர்கள் வெற்றியும் பெற்றனர் அம்மனுக்கு கோவிலையும் கட்டிக் கொடுத்தனர்.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கிபி 176 ஆம் ஆண்டு அம்மனுக்கு தனி கோவில் அமைத்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று வருகின்றது.

இந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வேண்டினால் வேண்டிய வரத்தை சமயபுரம் மாரியம்மன் அளிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் நேரம்

கிழமை நேரம்
ஞாயிறு காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை
திங்கள் காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை
செவ்வாய் காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை
புதன் காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை
வியாழன் காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை
வெள்ளி காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை
சனி காலை 5:30 முதல் இரவு 9 மணி வரை

 

சமயபுரம் மாரியம்மன் கோவில் போன் நம்பர்

Samayapuram,Tamil Nadu-621112

0431 267 0460

மேலும் படிக்க..

சனி பெயர்ச்சி பலன் 2023 To 2026 | Sani Peyarchi 2023
Zodiac Signs In Tamil | 12 ராசிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR