சாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன் | Sami Silai Kanavil Vanthal Enna Palan
வணக்கம் நண்பர்களே.!! தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும் அப்படி வரும் கனவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. தூக்கத்தில் வரும் கனவுகளில் நல்லது நடப்பது மாதிரியும் வரலாம் கெட்டது நடப்பது மாதிரியும் வரலாம்.
நல்லது நடப்பது போல் கனவு வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் கெட்டது நடப்பது போல் கனவு வந்தால் ஏதாவது நடந்து விடுமோ என்று பயத்துடன் இருப்போம் நீங்கள் காணும் கனவு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அந்த வகையில் சாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.பொதுவாக சாமி கனவில் வந்தாலோ அல்லது சாமி சிலை கனவில் வந்தாலோ நல்லது தான்.
சாமி சிலை கனவில் வந்தால் நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை அவர்கள் உங்களை வணங்குவதற்காக அழைக்கிறார்கள் அதனால் உங்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் |
சாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக எந்த ஒரு சாமி சிலை கனவில் வந்தாலும் அது உங்களுக்கு நல்லது தான். சாமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. உங்களின் வாழ்நாளில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.சாமி சிலை கனவில் வந்தால் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு பல நன்மைகள் ஏற்படும்.
கனவில் கடவுள் சிலை வந்தால் என்ன பலன்
கனவில் கடவுள் சிலை வந்தால் அது நல்லது தான். உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும். தீமைகள் எதுவும் உங்களை நெருங்காது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் |
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |