சனி பெயர்ச்சி பலன் 2023 To 2026 | Sani Peyarchi 2023
வணக்கம் நண்பர்களே.!! இந்து சமயத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஜாதகத்தை நம்புகின்றனர். பெரும்பாலானார் தினமும் காலையில் எழுந்து காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள 12 ராசிகளுக்கான பலன்களையும் மற்றும் டிவியில் காலையில் ராசி பலன்களையும் பார்த்து கொண்டு தான் தங்களின் வேலைகளை தொடங்குகின்றனர்.ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் நன்மைகள் தீமைகள் அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் பொறுத்துதான் அமைகிறது.
நம் ஜாதகத்தில் இருக்கும் கிரகம் மாற்றங்கள் மூலம் நமக்கு பல நன்மைகளும் தீமைகளும் நடக்கிறது. ஜாதகத்தில் சனி பகவான் இருப்பார் எனவும் அனைவரும் ஜாதகம் பார்ப்பதற்கு அஞ்சுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடம் பயணிப்பார்.சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை தான் சனிப்பெயர்ச்சி என்பார்கள்.2023 முதல் 2026 வரை நடக்கும் சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு நன்மை மற்றும் தீமை என்பதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2023 to 2026
ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சி எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாறி உள்ளார் என்பதை பார்ப்பது வழக்கமான ஒன்றாகும் அதே போல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி சனி பகவான் மகர ராசி யிலிருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்து உள்ளார்.
12 ராசி பெயர்கள் | Sani Peyarchi 2023
- மேஷம்
- ரிஷபம்
- மிதுனம்
- கடகம்
- சிம்மம்
- கன்னி
- துலாம்
- விருச்சிகம்
- தனுசு
- மகரம்
- கும்பம்
- மீனம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 ராசிக்கு 2023 முதல் 2026 வரை நடக்கும் சனிப்பெயர்ச்சி மற்றும் நன்மை தீமைகளை பற்றி விவரங்களை பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் இயல்பாகவே மன உறுதியுடன் நல்ல ஆற்றலுடன் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு கோபம் அதிகம் வரும் அந்த கோபத்தினால் உங்களை பலரும் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்பட்டால் மிகவும் நல்லது.
2023 முதல் 2026 வரை நடக்கும் சனிப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு பல நன்மைகள் நடக்க இருக்கிறது இதுநாள் வரை உங்களுக்கு கிடைத்த நன்மைகள் அப்படியே இரண்டு மடங்காக அதிகரித்து கிடைக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இப்பொழுது வரும் சனி பெயர்ச்சியின் மூலம் பல நன்மைகள் நடக்க இருக்கிறது. ரிஷப ராசி காரர்களுக்கு பிரபல யோகா அதிபதி சனி பகவான் இதனால் சனிபகவான் நல்ல நிலையிலிருந்து ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் என்னதான் நன்மைகள் செய்தாலும் சனி பகவானே ரிஷப ராசிக்காரர்களுக்கு பாதகமாக இருக்கிறார்.பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்கள் ஆக இருப்பவர்கள் தன் அப்பாவை விட ஒரு மடங்கு பெரிய ஆளாகி காட்ட வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்துடன் செயல்படுவார்கள்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மிதுனம்
சனி பகவான் 2016 முதல் 2023 வரை மிதுனம் ராசிக்காரர்களை படாதபாடு படுத்தி விட்டார் பெரும் கஷ்டம் துன்பத்துக்கு மிதுன ராசிக்காரர்கள் ஆளாகி இருப்பார்கள் ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது விடிவு காலம் பிறக்கும் வகையில் 2023 முதல் இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்க இருக்கிறது.
தொழிலில் முன்னேற்றங்கள் ஏற்படும் பணவரவு உங்களைத் தேடி வரும் புதிய வீடு வாங்க நினைத்துக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்கள் இப்பொழுது புது வீடு வாங்குவதற்கான வழி கிடைக்கும்.இதனால் வரை ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 கடகம்
கடகம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் யாருக்கும் பயப்பட மாட்டார்கள் பிறரின் மிரட்டல்களுக்கெல்லாம் துளி கூட அஞ்ச மாட்டார்கள் கடக ராசிக்காரர்களின் நம்பிக்கை மலை போல் இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஆர்வமாக தெரிந்து கொள்வார்கள்.
இருந்தாலும் கடக ராசிக்காரர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது உங்களைத் தேடி திடீர் அதிர்ஷ்டம் வரலாம். உங்கள் குலதெய்வம் வணங்குங்கள் மற்றும் பெற்றோருக்கு பாத பூஜை செய்து வணங்குவது மிகவும் நல்லது அது உங்களுக்கு வர இருக்கும் கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தரக்கூடும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தை செய்ய நினைத்தாலும் அதை அப்பொழுதே செய்து முடித்து விடுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் திறமையாக செயல்பட்டு அனைவருக்கும் வழிகாட்டுபவராக இருப்பீர்கள். பேச்சில் மற்றவர்களை திட்டினாலும் உங்கள் மனதில் அவர்கள் மீது அன்பு அதிகமாக இருக்கும்.
சிம்மம் ராசிக்காரர்கள் இந்த வருடம் மிகவும் நல்ல வருடமாக அமைந்து உள்ளது அதனால் வாகனங்கள் வீடு வாங்குவதற்கான நிறைய வழிகள் கிடைக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் நீண்ட வருடமாக கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் பலன்கள் உண்டாகும் கடந்த இரண்டு வருடமாக நிறைய பேரிடம் அவமானம் பெற்று இருப்பீர்கள் வரும் இரண்டு வருடத்திற்குள் அவர்களிடமிருந்து உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் முயற்சி மட்டும் கைவிடாமல் செய்வீர்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை பொறுமையாக நிறுத்தி நிதானமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி இருவர்களையும் சமமாக தான் பார்ப்பீர்கள்.
அனைவரையும் மனதார நேசிப்பீர்கள். உங்கள் மனதில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் புதிய முயற்சிகளில் கிடைக்கும்.அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது.
சனி பெயர்ச்சி 2023 to 2026 துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எந்த ஒரு முயற்சி செய்தாலும் அதில் நம்பிக்கை விடாமல் இருப்பீர்கள். அவர் புதிய முயற்சியில் வீழ்ச்சி கிடைத்தால் அது எல்லாம் முன்னேறுவதற்கான வழி என்று நம்புவீர்கள். அனைவரின் கஷ்டத்திலும் பங்கு எடுத்துக் கொள்வீர்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து மகிழ்ச்சி தரும் வருடமாக அமைந்துள்ளது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் திருமணம் நடக்காமல் நீண்ட நாட்கள் இருப்பவர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாகனங்கள் வீடு வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் வீடு வாகன ம் வாங்குவீர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் உங்களுக்கு நல்ல வருடம் ஆக அமைந்துள்ளது.
சனி பெயர்ச்சி 2023 to 2026 விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள் யாருக்கு ஒரு கஷ்டம் என்றாலும் உடனடியாக சென்று உதவி செய்வீர்கள் இதன் மூலம் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொள்வீர்கள். அனைத்து சட்ட திட்டங்களையும் பின்பற்றி நடந்து கொள்ளும் நீங்கள் தேவையில்லாமல் யாரிடம் அதிகமாக பழக மாட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் இந்த வருடத்திலிருந்து ஒரு மாற்றம் ஏற்படும் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு சென்றாள் உங்களுக்கு தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பண வரவுகள் வரும். புதிதாக வீடு வண்டி வாகனங்கள் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 தனுசு
தனுஷ் ராசிக்காரர்கள் முதலில் ஒரு முடிவை மிகவும் ஆலோசித்து யோசிப்பீர்கள் அப்படி எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் இருப்பீர்கள். வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதித்து பெரிய இடத்திற்கு சென்றாலும் பழமையை மறக்காமல் இருப்பீர்கள். மனசாட்சி படி நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த வருடத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நீண்ட நாட்களாக இருப்பீர்கள் இந்த வருடத்தில் அந்த புதிய தொழிலை தொடங்குவீர்கள். உங்கள் சகோதரனிடம் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடுகள் இருக்கும் அந்த கருத்து வேறுபாடுகள் தற்போது ஒரு முடிவுக்கு வரும். ஏற்கனவே தொழில் ஏதும் செய்து கொண்டிருந்தால் அந்த தொழிலில் லாபங்கள் கிடைக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மகரம்
மகரம் ராசிக்காரர்கள் மிகவும் அமைதியான தன்மை கொண்டவர்கள் ஈ,எறும்பு,செடி,கொடி போன்றவற்றிற்கு கூட துன்பம் விலையை விக்காதவர்கள். நீங்கள் ஒரு செயலை செய்யும் பொழுது அந்த செயலில் தோல்வி ஏற்பட்டால் தோல்வியை பெரிதும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
கடந்த இரண்டு வருட காலமாக சனிப்பெயர்ச்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்திருப்பீர்கள். இந்த வருடம் தொடக்கத்திலிருந்து சனிபகவான் பெயர்ச்சி அடையப் போகிறார். அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் பேசும்பொழுது மிகவும் கவனமாக பேச வேண்டும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் எந்த ஒரு துன்பம் ஏமாற்றம் தோல்வி எது வந்தாலும் அதை கவலை கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் மனதை கொண்டவர்கள் ஒரு நல்ல விஷயத்தை யார் சொன்னார் என்று பார்க்காமல் சொல்லிய விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வீர்கள்.
இந்த வருடத்திலிருந்து உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்க இருக்கிறது அதனால் புதிய முயற்சிகள் ஏதேனும் எடுப்பீர்கள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அடுத்து இரண்டு ஆண்டுகள் உங்களுக்கு கடன் வரலாம் வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவலையாக இருப்பவர்கள் இந்த வருடத்திலிருந்து கவலைகள் நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மீனம்
மீனம் ராசிக்காரர்கள் எந்த ஒரு காரியத்தை செய்ய தொடங்கினாலும் அந்த காரியத்தை முடிக்காமல் உங்களால் இருக்க முடியாது. உங்களுக்கு யாராலும் யோசனை சொல்ல முடியாது நீங்கள் பல பேருக்கு யோசனை சொல்வீர்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று யோசிக்காமல் நீங்கள் அனைவரையும் நம்புவீர்கள்.
பண சேமிப்பு அதிகரிக்கும் எந்த அளவுக்கு நீங்கள் பணத்தை சேர்த்து வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு செலவும் வரும் அதாவது செலவு கம்மி என்று நினைத்து நீங்கள் செய்யும் செலவு அதிகமான செலவில் போய் முடிந்து விடும். புது வீடு வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது இந்த வருடத்தில் அதிக அளவு கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும்.
Read Also:
Zodiac Signs In Tamil | 12 ராசிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
செவ்வாய் தோஷம் காதல் திருமணம் | Sevai Thosam in Tamil
Varahi Amman History In Tamil | வாராஹி அம்மன் 108 போற்றி
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kandha Sasti Kavasam in Tamil