நடிகர் சசிகுமார் ஒரு இந்தியா திரைப்பட நடிகராக இருக்கிறார் இவர் ஆரம்பத்தில் பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பாலா மற்றும் அமீர் போன்ற இயக்குனர்களிடம் சசிகுமார் உதவி இயக்குனராக ஆரம்பத்தில் பணியாற்றினார் தொடர்ந்து இவர் சுப்பிரமணியபுரம் என்ற படத்தை முதல் முறையாக இயக்கி அதில் பரமன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.இவர் அந்த படத்தில் பரமன் என்ற கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சுப்பிரமணியபுரம் படம் வெற்றிக்குப் பிறகு ஈசான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சமுத்திரக்கனிக்கு மற்றும் சசிகுமாருக்கும் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது இதை தொடர்ந்து சசிகுமார் சுந்தரபாண்டியன்,போராளி போன்ற திரைப்படங்களில் கிராமப்புற பகுதியைச் சார்ந்தவராக நடித்திருந்தார்.
இயக்குனராக அறிமுகமான சசிகுமார் படங்களை நடிக்க தொடங்கி முழு நேர நடிகராகவே மாறிவிட்டார்.இப்படி சிறப்பாக போய்க்கொண்டிருக்கும் பொழுது சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் 13 வருடத்திற்கு பிறகு இயக்குனர் பணியை தொடங்கப் போகிறேன் என்றும் சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.