Homeதமிழ்செல்வ மகள் சேமிப்பு திட்டம் | Selvamagal Semippu Thittam | Selva Magal Thittam

செல்வ மகள் சேமிப்பு திட்டம் | Selvamagal Semippu Thittam | Selva Magal Thittam

செல்வ மகள் சேமிப்பு திட்டம் | Selvamagal Semippu Thittam | Selva Magal Thittam

பெண்களுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது.பெண்களுடைய பெயரில் வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து ஆரம்பித்து அவர்களுடைய பெயரில் கடன் வாங்கினால் வட்டி சலுகைகள் என்பது வரை நிறைய சலுகைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த வகையில் பெண்களுக்கு மட்டுமே ஒரு வசதியை ஏற்படுத்தி இருக்கின்றனர்.சுகன்யா சம்ருதி யோஜனா என்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

- Advertisement -

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

இந்தத் திட்டம் மத்திய அரசு தொடங்கியது.மேலும் இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகின்றது.மேலும் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை அணைத்து அஞ்சல் அலுவலகத்திலும் துவங்கி கொள்ள முடியும்.

இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தொடங்கப்பட்டிருக்கிறது.இந்தத் திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.இந்தத் திட்டம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.மேலும் இந்த திட்டத்தில் 29.12 லட்சம் புதிய கணக்குகளை தொடங்கி முதலிடத்தை பிடித்திருக்கிறது உத்திரபிரதேச மாநிலம்.

மேலும் இதனுடைய குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 250 ஆரம்பத்தில் இந்த தொகை ஆயிரம் ரூபாயாக இருந்தது.மேலும் அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்று இதனுடைய குறைந்தபட்ச முதலீடு தொகையாக ரூபாய் 250க்கு கொண்டுவரப்பட்டது.பிறகு ரூபாய் 50 மடங்குகளில் அதாவது ரூபாய் 300 ரூபாய் 350 400 என்பது போல் முதலீடு செய்து வர முடியும்.இந்தத் திட்டத்தில் ஆரம்பிக்கும் பொழுது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்படுகிறது.இதனுடைய வட்டி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது.இதனுடைய தற்போதைய நிலை வட்டி விகிதம் 7.6 சதவீதமாக வழங்கப்படுகின்றது.

மேலும் இந்தத் திட்டம் யாருக்கு உகந்தது யாருக்கு உகந்தது இல்லை இந்தத் திட்டத்தில் இணைவதற்கு அடிப்படையான தகுதிகள் என்ன என்பதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

- Advertisement -
selvamagal semippu thittam
Selvamagal Semippu Thittam Age Limit

இந்த திட்டத்தில் இணைவதற்கு உங்களுடைய குழந்தைகளின் வயது 10 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கான பெற்றோர் இந்த கணக்கை ஆரம்பித்து கொள்ளலாம்.ஒருவர் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையின் பெயரில் இந்த கணக்கை ஆரம்பித்துக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தில் இரண்டாவது பிரசாரத்தை இரண்டு பெண் குழந்தைகள் அல்லது முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் வரை இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.இந்திய குடிமக்கள் மட்டுமே தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை ஆரம்பித்து கொள்ள முடியும்.வெளிநாட்டு இந்தியர்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை ஆரம்பிக்க முடியாது.மேலும் இந்த கணக்கை ஆரம்பிக்க கட்டணங்கள் எதுவும் கிடையாது.

- Advertisement -
மாணிக்கவாசகர் வரலாறு | Manikkavasagar History in Tamil
Selvamagal Semippu Thittam Account Opening

இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு தபால் அலுவலகத்திலும் இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.இந்தத் திட்டத்தில் அதிகம் பேர் பயனடைய வேண்டும் என்பதற்கு வங்கிகளிலும் இந்த கணக்கை ஆரம்பிக்கும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் இந்த கணக்கை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.இந்த கணக்குகளை வங்கிகள் நிர்வகித்தாலும் இது மத்திய அரசின் திட்டமாக தான் இருக்கின்றது.இந்த வகையில் இந்தத் திட்டத்தில் வங்கிகள் மூலம் முதலீடு செய்தாலும் அசல் மட்டும் வட்டிக்கு மத்திய அரசின் முழுமையான உத்தரவாதம் இருக்கின்றது.பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெற்றோர் புகைப்பட அடையாள ஆதாரம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் போன்றவை இருந்தால் இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.

மேலும் இந்த கணக்கிற்கு பணம் மற்றும் செக் முறையிலும் அல்லது வங்கிகளில் ஆன்லைன் மூலமும் இந்த கணக்கிற்கு பணம் செலுத்தும் வசதி இருக்கின்றது.அது மட்டும் இல்லாமல் இந்த கணக்கிற்கு மாதம் ஒருமுறை அல்லது ஒரு வருடத்திற்கு மொத்த முதலீடாகவும் செலுத்திக் கொள்ள முடியும்.

இந்த கணக்கின் நிபந்தனை காலம் 14 ஆண்டுகள் அல்லது பெண்களுக்கு திருமணம் ஆகும்வரை இந்த கணக்கிற்கு பணத்தை செலுத்திக் கொள்ள முடியும்.

selvamagal semippu thittam
Selvamagal Semippu Thittam Details

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து அதிகபட்சம்  150000 ரூபாய் வரை பைப்பு தொகையாக செலுத்திக் கொள்ளலாம்.மேலும் வருடத்திற்கு 7.6% வட்டி வழங்குகிறது.இந்த கணக்கை தொடங்க இருப்பவர்கள் எல்லா மாதமும் 10 தேதிக்குள் தவணை பணத்தை கணக்கில் செலுத்த வேண்டும்.ஒருவேளை தவறிவிட்டால் வட்டி குறைந்துவிடும்.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ள முடியும்.அது மட்டும் இல்லாமல் அதிகப்படியான தொகையை செலுத்தினால் அந்தத் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் கிடையாது.கூடுதலாக செலுத்திய தொகையை எப்பொழுது வேண்டுமென்றாலும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாக செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் வட்டியானது வருடத்திற்கு 4 சதவீதம் வட்டியை மட்டும் பெற முடியும்.மேலும் இந்த கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் பொழுது 50 ரூபாய் அபராதம் செலுத்தி மீண்டும் அந்த கணக்கினை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.மேலும் முதிர்வு தொகையை 21 ஆம் ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ள முடியும்.அது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது அவருடைய கல்வி அல்லது திருமண செலவுக்காக இந்த கணக்கில் இருக்கும் தொகையில் 50 சதவீதத்தை பெறலாம்.

நீங்கள் இந்த கணக்கை வேறு வங்கிக்கோ அல்லது வேறு தபால் நிலையத்திற்கோ மாற்ற விரும்பினால்.ரூபாய் 100 கட்டணமாக செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும்.மேலும் இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான முழு விவரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

  • ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.
  • குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர்கள் மட்டும் இந்த கணக்கை தொடங்க முடியும்.
  • குழந்தைக்கு 10 வயது வரை இருப்பவர்கள் மட்டும் இந்த கணக்கை தொடங்க முடியும்.
selvamagal semippu thittam
செல்வமகள் சேமிப்பு திட்டம் அட்டவணை | Selvamagal Semippu Thittam Calculator
Selvamagal Semippu Thittam
மாத முதலீடு வருட முதலீடு மொத்த முதலீடு கடைசி தொகை
500 500 * 12 = 6000 90000 183488.66
1000 1000 * 12 = 12000 180000 546977.31
2000 2000 * 12 = 24000 360000 1093954.62
5000 5000 * 12 = 60000 900000 2734886.56
7000 7000 * 12 = 84000 1260000 3828841.19
10000 10000 * 12 = 120000 1800000 5469773.12
12500 12500 * 12 = 150000 2250000 6837216.41

 

இதையும் படிக்கலாமே..

பெரியார் வாழ்க்கை வரலாறு | Periyar History in Tamil
தீபாவளி பண்டிகை வரலாறு | History of Diwali in Tamil
மணல்மேடு சங்கர் வரலாறு | Manalmedu Shankar History In Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR