செவ்வாய் தோஷம் காதல் திருமணம்
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் காதல் திருமணம் செய்து கொள்ள முடியுமா? ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் நான்காம் வீடு,ஏழாம் வீடு,எட்டாம் வீடு,12 ஆம் வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.
நவகிரகங்கள் திருமணத்திற்கும் நம்முடன் பயணிக்க உறவுகள் அமைவதையும் நிர்ணயிப்பது சாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் ஒருவரின் ஜென்ம லக்கினத்தில் இருந்து 1,2,4,7,8,12 போன்ற வீடுகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறப்படுகின்றது இந்த தோஷம் பொதுவாக திருமண வாழ்க்கையை பாதிப்படைய செய்கிறது. இதனால் தடைகள் மற்றும் மன நிம்மதியை ஏற்படுத்துகிறது குடும்பத்தில் பிரச்சனை பிரிவினை மற்றும் விவாகரத்து போன்றவற்றிற்கு வழிவகுத்து இருக்கிறது. செவ்வாய் தோஷம் கடுமையாக இருந்தால் தொழில் தடை, நிதி இழப்பு இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
Tamil Sevai Thosam Pariharam
செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய பரிகாரங்கள்
செவ்வாய் தோஷத்தில் இருக்கும் தீமைகளைப் பற்றி ஒருவர் கவலைப்பட தேவையில்லை ஏனென்றால் செவ்வாய் கிரகம் கொடுக்கும் கெடு பலன்களை நிவர்த்தி செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கிவிடும்.
திருமணம் செய்யும் பொழுது ஆண் பெண் என்ற இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருந்தால் அது தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்.பிறகு அவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
வாழை மரத்திற்கு தாலி கட்டுதல்
நீங்கள் திருமணம் செய்பவருக்கு செவ்வாய் தோஷம் கடுமையாக இருந்தால் அவர்களுக்கு வாழை மரத்துடன் திருமணம் செய்து வைப்பது செவ்வாய் தோஷத்திற்கான ஒரு பரிகாரமாகும்.இந்த சடங்கை செய்த பின் அவர் நதியில் குளித்துவிட்டு உடுத்தியிருந்த ஆடைகளை நீரில் கழட்டி விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும் இப்படி செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கிவிடும்.
செவ்வாய் தோஷம் கடவுளுக்கு தாலி கட்டுதல்
கடவுள் விஷ்ணு உருவத்தில் வெள்ளி அல்லது தங்கம் சிலையை செய்து அதற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும்.இதனை செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் பிறகு உங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
செவ்வாய் இருக்கும் இடம்
ஒருவர் ஜாதகத்தில் முதல் வீட்டில் மேஷம் இருந்து இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அதனை செவ்வாய் தோஷமாக கருத கூடாது.ஏனென்றால் சொந்த வீடான நேசத்தில் செவ்வாய் இருந்தால் அது தானாகவே தோஷம் நீங்கிவிடும் என்று கூறுகின்றார்கள்.
செவ்வாய் தோஷம் விரதம் இருப்பது
செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்தால் பயனுள்ள பரிகாரமாக கருதப்படுகின்றது.இந்த நாளில் விரதம் கடைப்பிடிப்பவர்கள் துவரம் பருப்பை மட்டும் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
செவ்வாய் தோஷம் மந்திரம் உச்சரித்தல்
திருமணம் செய்த நபர்கள் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நவகிரக மந்திரத்தை சொல்ல வேண்டும்.மேலும் அவர்கள் காயத்ரி மந்திரத்தை ஒரு நாளைக்கு 108 முறை சொல்ல வேண்டும்.
செவ்வாய் தோஷம் கோவில் பூஜை
நவகிரக ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.மேலும் செவ்வாய்க்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.வெண்கலம் மற்றும் இனிப்புகளை தானம் செய்வது மற்றும் கோவிலில் நெய் தீபம் ஏற்றுவது போன்ற செயல்களை செய்தால் செவ்வாய் தோஷத்தை நீக்கிவிடலாம்.