Homeமருத்துவம்செவ்வாழை பயன்கள் | Sevvalai Benefits in Tamil

செவ்வாழை பயன்கள் | Sevvalai Benefits in Tamil

செவ்வாழை பயன்கள் | Sevvalai Benefits in Tamil

செவ்வாழை பயன்கள்

  • வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும்.
  • வைரஸ் கிருமிகளால் நம் உடல் பாதிப்பு அடையாமல் இருக்கத் தினந்தோறும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும்.
  • கண் பார்வை மங்குதல், கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகியவைகளுக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.

செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்

  • செவ்வாழைப் பழத்தை நாள் தோறும் சாப்பிட்டு வந்தால் குளுகோமா என்ற கண் பார்வை இழப்பு எனும் கொடிய வியாதியைப் போக்கி விடலாம். இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும். உடலுக்கு நல்ல பலத்தைத் தந்து உற்சாகத்தை ஊட்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் அதிக அளவில் வலுவடையும்.
  • ஆண்மை இழந்தவருக்கு ஆண்மையை உண்டாக்கிக் குழந்தைப் பேற்றை உண்டாக்கும். இவர்கள் தொடர்ந்து ஒரு வருடமாவது செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும். ஆண்மை எழுச்சி  பெறுவதுடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

செவ்வாழை பழத்தின் நன்மைகள்

  • செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்ட பின்பு, ஒரு தேக்கரண்டி தேனை அருந்த வேண்டும். பல் தொடர் புள்ள பல்வேறு பிரச்னைகள் அனைத்தையும் செவ்வாழைப் பழம் தீர்த்து வைக்கும். பல் வலி பஞ்சாய் பறந்து போகும்.
  • செவ்வாழைப் பழம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. உடம்பை விரைவாகத் தேற்றுகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது.
  • செவ்வாழை சக்தி நிறைந்த பரிபூரண உணவு ஆகும். இப்பழத்தில் உள்ள மக்னீசியம் மாரடைப்பு வராமல் தடுக்கும் சக்தி உடையதாகக் கருதப்படுகிறது.
  • வைட்டமின் A, B1, B2, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், தையமின், மக்னீசியம், ரிபோபிளேவின், நியாசின் என்று எல்லாச் சத்துக்களும் உள்ளன.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR