நயன்தாரா தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவின் ஒரு முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார்.நயன்தாரா நீண்ட நாட்களாக இயக்குனர் விற்பனை சிவனை காதலித்து வந்தார்.இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளை வாடகை தாயின் மூலம் பெற்று எடுத்து வளர்த்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு படம் நடிப்பதை கொஞ்ச நாள் நிறுத்தி வைத்திருந்தார் அதன் பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது மற்றும் விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார்.ஜவான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் ஜவான் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அட்லியை பாராட்டி உள்ளார்.
இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஷாருக்கான் இயக்குனர் விக்னேஷ் இவனை எச்சரித்துள்ளார். நயன்தாரா கிக் பாக்சிங் கத்துக்கொண்டதால் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று விக்னேஷ் இவனை ஷாருக்கான் எச்சரித்துள்ளார்