கமலஹாசன் இந்தியாவில் ஒரு முன்னணி திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். பல்வேறு வேடங்களில் நடிப்பதில் சிறப்பு வாய்ந்தவராக கமலஹாசன் திகழ்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் கமலஹாசன் உடன் விவேக் இணைந்து நடித்து வந்தார்.இந்த படம் நீண்ட நாட்களாக சூட்டிங் எடுக்கப்பட்டு வந்தது இதனிடையில் கமலஹாசன் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வந்த காரணத்தால் இந்த படத்தின் சூட்டிங் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து தற்பொழுது இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது இந்த படத்தில் நடித்த விவேக் உடல்நிலை குறைவு காரணத்தால் இறந்து விட்டார்.இந்தியன் 2 பாகத்தில் விவேக் நடித்த காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டு விடும் என ரசிகர்கள் வருத்தத்துடன் சொல்லி வந்தனர்.
விவேக் நடிக்கும் காட்சிகள் எதையும் நீக்கப்படாமல் இயக்குனர் சங்கர் சிஜி மற்றும் விவேக்கை போல இருப்பவர்களை வைத்து இந்த படத்தின் மூலம் விவேக்கிற்கு உயிர் கொடுத்து உள்ளார் இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.