Shinchan in Tamil | ஷிஞ்சன்
உலகில் பலவிதமான கார்ட்டூன் தொடர்கள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் shinchan.இதனைப் பற்றி உங்களுக்கு தெரியாது சில தகவல்களை பற்றி பார்ப்போம்.shinchan என்ற கதாபாத்திரத்தின் பெயர் உண்மையானது இல்லை இந்த கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் shinnoshuke shin nohara மேலும் இதில் உள்ள shin என்ற பெயரும் Chan என்ற வார்த்தை சிறுவன் என்பதையும் கூறுகின்றது.இப்படிதான் இந்த கதாபாத்திரத்துக்கு பெயர் வந்தது.
Shinchan-ன் வரலாறு
Shinchan முதலில் கார்ட்டூனாக வெளிவரவில்லை இது ஒரு காமிக்ஸ் தொடராக வெளிவந்தது.இந்த தொடரின் கதை ஆசிரியர் yoshito usui ஆவார்.இந்த காமிக்ஸ் வெளிவந்த ஒரு சில வருடங்களில் 250 மில்லியன் காப்பிகள் விட்டு தீர்த்தன இது காமிக்ஸ் உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
Shinchan-ன் சமூக கருத்துக்கள்
Shinchan வெற்றியடைய முக்கியமான காரணம் நம் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை எளிமையாக கூறும் விதம் என்றும் இதன் காரணமாக இந்த தொடர் இந்தியாவில் சென்சார் செய்யப்பட்ட முதல் கார்ட்டூன் தொடராக அறிமுகம் செய்யப்பட்டது.இது பல்வேறு சர்ச்சைகளின் கீழ் இந்த தொடரில் உள்ள அனைத்து காட்சிகளும் மாற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.
காதல் மன்னன்
பார்ப்பதற்கு அப்பாவிப் போல் தெரியும் இவர்தான் shinchan இவர் இளம் வயது பெண்களிடம் வலிந்து வலிந்து பேசி அவர்களை வசியம் செய்பவர்.இதுபோல் இந்த தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக இந்த கார்ட்டூன் தொடர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கு முதன் முதலில் வெளிவந்தது அதன் பிறகு பல்வேறு சர்ச்சைகளால் கதைக்களம் அனைத்தும் மாறிவிட்டது.
கவுன்டர்களின் மன்னன்
இந்த கார்ட்டூன் மிகப் பிரபலமான முக்கிய காரணம் இதில் வரும் கவுன்டர்கள் தான்.தமிழிலும் சரி ஜப்பான் மொழியிலும் சரி தலைவன் கூறக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டு வருகிறது.அந்த அளவிற்கு அதில் வரும் வசனங்களை எழுதி இருப்பார்கள் இதற்கான பெருமை அனைத்தும் வசனம் எழுதியவர் கே சொந்தம் என்று கூறுவார்கள்.
Shinchan தொடரை பார்க்க
நீங்கள் இந்த தொடரை பார்க்க விரும்பினால் youtube,hotstar,hungama,Facebook,Instagram போன்ற வலைதளங்களில் பார்க்கலாம்.
கதைஆசிரியர் மரணம்
இந்த அளவிற்கு இந்த தொடர் உலக அளவில் ஹீட் கொடுத்த shinchan தொடரை எழுதிய கதை ஆசிரியர் 2009 ஆம் ஆண்டு ஒரு மலையில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.இதுவரை இவரின் மரணம் மர்மமாகவே இருந்து வருகின்றது.