நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் செல்லும் வழியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்மா சாமி கோயில்கள் உள்ளன.இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு செல்லும் வலியை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதால் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் நாமக்கல் கலெக்டர் உமா வழித்தடங்களில் ஆக்கமிக்கப்பட்டல்ல கடைகளை அகற்ற உத்தரவிட்டார் அதன்படி உதவி கலெக்டர் சரவணன் தலைமையில்,வருவாய்த்துறை,நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பூக்கடைகள் மற்றும் வணிக ரீதியான கடைகளை அகற்றப்பட்டன.
அது மட்டும் இல்லாமல் நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைவீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அவரவர்களை தங்களின் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார் அது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்றால் நகராட்சி பணியாளர்கள் மூலம் அதை அகற்றப்பட்டு தடை உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.