சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் | Siruthai kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
நாம் தூங்கும் போது நம் கனவில் விலங்குகள் நம்மை துரத்துவது போல கடிப்பது போல துன்புறுத்துவது போல என பல வகை கனவுகள் வரும் அந்த வகையில் சிறுத்தை உங்கள் கனவில் வந்தால் என்னென்ன நடக்கும் என இந்த பதிவில் பார்க்க போகிறோம்.சிறுத்தை உங்கள் கனவில் வந்தால் நன்மைகள் நடக்குமா தீமைகள் நடக்குமா என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன்
சிறுத்தை உங்கள் கனவில் வந்தால் நீங்கள் அப்பாவித்தனமாக பலவீனமாக இருந்தால் உங்களை வைத்து பிறர் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையை கூட பாதிக்கலாம்.உங்களின் தோல்விகளை சமாளிக்க நீங்களே தன்னம்பிக்கைகளை கொண்டு வெற்றி பெற வேண்டும்.
சிறுத்தையை பார்ப்பது போல் கனவில் வந்தால்
சிறுத்தையை பார்ப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான எண்ணங்களில் குழம்பி கொண்டு இருப்பீர்கள். உங்கள் எதிரிகளுடன் நீங்கள் போட்டி போடும் சூழ்நிலை ஏற்படும்.நீங்கள் பிறரிடம் போட்டியிடும் பொழுது அந்த போட்டியை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
சிறுத்தை உங்களை கடிப்பது போல் கனவில் வந்தால்
சிறுத்தை உங்களை கடிப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள எதிரிகள் உங்களை தாக்குவதற்கான அறிகுறியாகும். உங்கள் எதிரி உங்களை துன்புறுத்துவார்கள் என நீங்கள் பயப்படுவதற்கான அறிகுறி ஆகும்.
இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஒருவர் ஆதரவாக இருப்பார்கள் அவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வருவதற்கு உதவியாக இருப்பார்கள்.
சிறுத்தை உங்களுடன் பழகுவது போல் கனவில் வந்தால்
சிறுத்தை உங்களுடன் பழகுவது போல் கனவில் வந்தால் நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள் உங்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்து விடும். நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து சிறிது நேரம் ஓய்வு பெற்றிருப்பீர்கள்.
சிறுத்தை வேட்டையாடுவது போல் கனவில் வந்தால்
நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சிறுத்தை உடன் சண்டை இடுவது போல் கனவில் வந்தால்
தன்னம்பிக்கை இழந்து இருக்கும் நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சில சவால்களை மேற்கொள்வீர்கள்.உங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
சிறுத்தை இறந்து கிடப்பது போல் கனவில் வந்தால்
சிறுத்தை இருந்து கடப்பது போல் கனவில் வந்தால் உங்கள் தோல்வியை அனைவரும் அறிந்து விடுவார்கள். உங்கள் தோல்வி குறித்து நீங்கள் வருத்தம் பெறுவீர்கள்.
பூங்காவில் சிறுத்தையை பார்ப்பது போல் கனவில் வந்தால்
உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வெற்றி மிகுந்த போட்டிக்கு பிறகு தற்போது கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சிறுத்தை வீட்டில் இருப்பது போல் கனவில் வந்தால்
சிறுத்தை வீட்டில் இருப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள சூழ்நிலை எதுவும் உங்களுக்கு சாதகமாக இருக்காது உங்களுக்கான பிரச்சனைகள் அதிகரிக்கும் அதனால் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும்.
சிறுத்தை உங்களை பார்த்து உறுமுவது போல் கனவில் வந்தால்
உங்களுக்கான துன்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும் அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குட்டி சிறுத்தை கனவில் வந்தால்
குட்டி சிறுத்தை கனவில் வந்தால் உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள உங்களுக்கு வலிமை மற்றும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். உங்கள் திறன்களும் அதிகரிக்கும்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்