சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தற்போது தென்னிந்தியா மொழி திரைப்படங்கள் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும்,தயாரிப்பாளராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.
2012 ஆம் ஆண்டு மெரினா என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் ஆனால் அந்த படத்தில் இவருக்கு பெரிதும் கதை அமைக்கப்படவில்லை அதைத்தொடர்ந்து அதே ஆண்டு நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் இவரின் வெளிப்படையான நடிப்பு அனைத்து மக்களுக்கும் பிடித்து விட்டது.அதை தொடர்ந்து அதே ஆண்டு மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் கண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர்நீச்சல் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் அனைத்து சிறியவர் முதல் பெரியவர் வரை சிவகார்த்திகேயன் என்றாலே பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு அவரின் நடிப்பும் அந்த படமும் அமைந்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் கிராமப்புற பகுதிகளில் நடக்கும் சின்ன சின்ன கலாட்டாக்கள் காதல் போன்றவை மையப்பட்டி எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
தற்பொழுது முன்னணி நடிகராக பல படங்களில் நடித்துள்ளார் கடந்த வருடம் மே மாதம் வெளியான டான் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கரியரில் அதிக வசூல் செய்த படமாக இருந்துள்ளது தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்களின் எதிர்பார்ப்பை முறியடிக்கும் வகையில் இந்த படம் சரியாக ஓடவில்லை.
பிரின்ஸ் தோல்வியை சரி செய்வதற்கு மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிவி சேஷ் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் நடிக்கப் போகிறார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சிவகார்த்திகேயனிடம் உங்களின் ரகசியத்தை வெளியிட்டு விட்டேன் என்று மன்னிப்பும் கேட்டார்.
இவர் கூறியதற்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு இதை எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை அதனால் சிவகார்த்திகேயன் பாலிவுட் நடிப்பது ஒரு உண்மையாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.