சிவன் கனவில் வந்தால் என்ன பலன் | Sivan kanavil vanthal
வணக்கம் நண்பர்களே நான் அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
நம் தூங்கும்போது கனவு வருவது வழக்கம் சிவன் மாரியம்மன் முருகன் சாமி சிலை சாமி கோவில் உள்ளது சாமி நம்மிடம் பேசுவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
சிவன் கனவில் வந்தால் என்ன பலன்
சிவன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும். தீராத நோயினால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வருபவர்கள் கனவில் சிவன் வந்தால் அந்த நோய் விரைவில் நிவர்த்தி ஆகிவிடும்.
சிவனும் பார்வதியும் கனவில் வந்தால்
சிவனும் பார்வதியும் கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து சந்தோசங்கள் அதிகரிக்கும். தொழிலில் லாபங்கள் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கவும்.பொருளின் சேர்க்கைகள் உங்களை வந்து சேரும்.
நடராஜன் கனவில் வந்தால்
நடராஜன் கனவில் வந்தால் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் அல்லது நமக்கு வரப்போகும் பிரச்சனைக்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கும்.
சிவலிங்கம் கனவில் வந்தால்
சிவலிங்கம் கனவில் வந்தால் வெற்றிகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் நீங்கள் பல தடைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் அல்லது தடைகள் உங்களைத் தேடி வந்தாலும் அந்த தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
சிவனின் திரிசூலம் கனவில் வந்தால்
சிவனின் திரிசூலம் கனவில் வந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.
சிவனின் பிறை நிலவு கனவில் வந்தால்
படிக்கும் மாணவர்கள் கனவில் வந்தால் அவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள் குழப்பங்கள் எதுவும் இருந்தால் அது நீங்கி ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
நந்தி கனவில் வந்தால்
நந்தி கனவில் வந்தால் வாகனம் வாங்க நினைத்தால் அவர்கள் விரைவில் வாகனம் வாங்கி விடுவார்கள் வாகனம் வாங்க முடிவில் இருந்தால் அவர்கள் விரைவில் வாகனம் வாங்குவதற்கான ஒரு ஆலோசனை கிடைக்கும்.
சிவனின் மூன்றாம் கண் கனவில் வந்தால்
சிவனின் மூன்றாம் கண் கனவில் வந்தால் வாழ்வில் அடுத்த நடக்க இருக்கின்ற பிரச்சனையை குறிக்கிறது அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால்
சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு வந்தால் சிவன் மீது நீங்கள் அதிக பக்தி வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்