ஐஸ்வர்யா ராஜேஷ் தென்னிந்தியா திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார் இவர் மலையாளம் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி 2014 ஆம் ஆண்டு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.காக்கா முட்டை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல படங்களை நடித்திருந்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கனா, வடசென்னை இந்த இரண்டு படங்களும் இவர் கரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.இப்படி பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இணையாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால் இவரை பலரும் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று கூறி வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் நான் நடித்த காக்கா முட்டை திரைப்படம் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. திரை உலகத்தில் உள்ள அனைவரும் என்னை அழைத்து பாராட்டினார்கள். இப்படி இருக்கும் நிலையில் காக்கா முட்டை படம் நடித்து முடித்த பிறகு ஒன்றை வருடமாக எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
சிவகார்த்திகேயன் தனுஷ் விஜய் சேதுபதி துல்கர் சல்மான் போன்ற சில பெரிய நடிகர்களின் படங்களை தவிர மற்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு இதுவரை இன்னும் கிடைக்கவில்லை.அது மட்டும் இல்லாமல் நான் இதுவரை ஹீரோயினியாக மட்டும் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் இதனால் வரை பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தரவில்லை.
எதற்கு எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று எனக்கு தெரியவில்லை.இந்தியா சினிமாவில் எனக்கென ரசிகர்கள் இருக்கின்றார்கள் அதனால் நானே கதையின் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து தற்பொழுது நடித்து வருகிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.