Spinach In Tamil
Spinach In Tamil:வணக்கம் நண்பர்களே.!!கீரை நிறைய வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு பயன்கள் இருக்கிறது.கீரையில் அதிக மருத்துவ பயன்கள் இருப்பதால் மருத்துவர்கள் உணவில் கீரையை அதிகமாக சேர்த்துக் கொள்ள சொல்வார்கள்.கீரையில் உள்ள பயன்களை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Spinach In Tamil
Spinach In Tamil Name:கீரை
பொதுவாக நமக்கு எந்த ஒரு நோய் இருந்தாலும் மருத்துவரை அணுக செல்லும் பொழுது அவர்கள் நாம் சாப்பிடும் உணவில் ஒரு நாளைக்கு ஒரு வேலையாவது கீரையை சேர்த்துக் கொள்ள சொல்வார்கள் அந்த அளவுக்கு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது.எந்த அளவுக்கு நம் உணவில் கீரையை சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நோய் நம்மை விட்டு தள்ளியே தான் இருக்கும் இயற்கையாகவே கீரையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.
Spinach In Tamil Images
கீரை வகைகள்
கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது.சில கீரை வகைகளின் பயன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
- அகத்திக்கீரை
- குப்பைகீரை
- அரைக்கீரை
- பொன்னாங்கன்னி கீரை
- முருங்கை கீரை
- வல்லாரை கீரை
- முடக்கத்தான் கீரை
- மூக்கிரட்டை கீரை
- மணத்தக்காளி கீரை
- வெந்தயக்கீரை
- தூதுவலை
அகத்திக்கீரை
அகத்திக் கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது ஆனால் ஆல்கஹால் குடித்து இருப்பவர்கள் அகத்திக்கீரை சாப்பிடக்கூடாது மீறி சாப்பிட்டால் அவர்களுக்கு மாரடைப்பு வந்துவிடும்.உடலில் உள்ள வெப்பநிலையை அகத்திக்கீரை குறைக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
குப்பைகீரை
குப்பை கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. குப்பைக்கீரை என இதற்குப் பெயர் வந்த காரணம் இது குப்பையில் தான் நன்றாக வளரும்.குப்பை கீரைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அனைத்தும் குப்பை கீரை சாப்பிடுவதன் மூலம் நீங்கும்.
அரைக்கீரை
அரைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் அரைக்கீரையை தினமும் சாப்பிட்டு வரலாம் இதனால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். அரைக்கீரை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் இது குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பொன்னாங்கன்னி கீரை
பொன்னாங்கண்ணிக் கீரை இரண்டு வகைப்படும் நாட்டு பொன்னாங்கண்ணிக் கீரை சீமை பொன்னாங்கண்ணி கீரை என இருவகைப்படும் இதில் நாட்டு பொன்னாங்கண்ணி கீரையில் தான் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.பொன்னாங்கண்ணிக் கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும்.
முருங்கை கீரை பயன்கள்
முருங்கைக்கீரையில் அதிக மருத்துவ பயன்கள் உள்ளது.முருங்கைக்கீரையில் எந்த கீரையிலும் இல்லாத அளவிற்கு இரும்பு சத்து அதிகமாக உள்ளது.முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் கண்களுக்கு அதிகமாக சத்து கொடுக்கிறது.தினமும் உணவில் முருங்கைக் கீரையை சேர்ப்பது மிகவும் நல்லது. முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
வல்லாரை கீரை
வல்லாரை கீரை சாப்பிடுவதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும். வல்லாரை கீரை மூலிகை வகையைச் சார்ந்தது மற்ற கீரையை விட இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.அதிகளவு மன அழுத்தம் படபடப்பு தன்மை வருபவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டு வந்தால் இது போன்ற செயல்கள் எதுவும் நடக்காது.
முடக்கத்தான் கீரை பயன்கள்
முடக்கத்தான் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி பிரச்சனைகளை தீர்க்கிறது மூட்டு வலி பிரச்சனைகள் மட்டும் தீர்க்காமல் இன்னும் பல பிரச்சனைகளையும் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதன் மூலம் சரி செய்கிறது.
முடக்கத்தான் கீரை தீமைகள்
முடக்கத்தான் கீரையில் ஏராளமான பயன்கள் இருப்பது என்பது உண்மைதான். நம்ம அரிசி மாவில் செய்யும் தோசை போல் முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடக்கூடாது அது நம் உடலுக்கு கெடுதல்.
முடக்கத்தான் கீரை யார் சாப்பிட கூடாது
முடக்கத்தான் கீரையை பித்தம் இருப்பவர்கள் சாப்பிடலாம்.நீர் சத்து உள்ளவர்கள் அல்லது நீர் சத்தினால் கைகள் வீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிடக்கூடாது.
மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டை கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் வராது. சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் மட்டும் இது சரி செய்வதில்லை உடலில் இருந்து சிறுநீராக வெளியாக கூடிய கழிவுகள் வெளியே வருவதற்கும் இது உதவியாக இருக்கிறது.
மூக்கிரட்டை கீரை தீமைகள்
மூக்கிரட்டை கீரை அதிகளவு மருத்துவ பயன்கள் இருந்தாலும் இது இயற்கையாகவே உடம்பில் இருக்கும் நீரை வெளியேற்றக் கூடிய தன்மை கொண்டிருப்பதால் முக்கிரட்டை கீரை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் இருக்கும் நீர் வெளியேறி நீர் சத்து குறைந்து விடும். தினந்தோறும் மாத்திரை மருந்து சாப்பிடுவது மருத்துவரின் ஆலோசனைப்படி முக்கிரட்டை கீரை சாப்பிட வேண்டும்.
மூக்கிரட்டை கீரை எப்படி சாப்பிடுவது
முக்கிரட்டை கீரை அதிக அளவு யாருக்கும் கிடைக்காது. மூக்கிரட்டை கீரை கிடைத்தால் வாங்கி சாப்பிடுங்கள் அது உடலுக்கு மிகவும் நல்லது முக்கிரட்டை கீரையை நாம் எல்லா கீரையும் சமைப்பது போல் எளிமையாகவே சமைத்து சாப்பிடலாம்.
மணத்தக்காளி கீரை பயன்கள்
மணத்தகாளி கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. மணத்தகாளி கீரை தண்டு இலை காய் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. வாய்ப்புண் வயிற்றுப்புண் அதிகமாக வருவார்கள் மணத்தகாளி கீரை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் வராது.அதுமட்டுமல்லாமல் அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த மணத்தக்காளி கீரை சாப்பிடலாம். மணத்தக்காளி கீரை சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனையை சரியாகிவிடும்.
மணத்தக்காளி கீரை தீமைகள்
மணத்தகாளி கீரை போலவே பல வகையான கீரைகள் இருக்கிறது மணத்தகாளி கீரை என்று மாறாக அதை சாப்பிட்டால் பிரச்சனைகள் வரலாம் அதனால் மணத்தகாளி கீரை மட்டும் சாப்பிட வேண்டும்.
வெந்தயக்கீரை
வெந்தயக் கீரையை நம் வீட்டில் அந்த அளவுக்கு பயன்படுத்த மாட்டோம். வெந்தயக்கீரையில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. ரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகள் வெந்தயக்கீரை சாப்பிடுவதன் மூலம் குறைந்து விடும்.
தூதுவலை பயன்கள்
தூதுவளையில் மருத்துவ குணங்கள் நிறைவே அடங்கியுள்ளது. பொதுவாக சளி இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் தூதுவளையில் ரசம் வைத்து சாப்பிட்டால் இது போன்ற நோய்கள் நீங்கிவிடும்.வாதம் பித்த நோய்கள் இருப்பவர்கள் தூதுவளையை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.
Read Also:
நெல்லிக்காய் தீமைகள் மற்றும் பயன்கள்