முடக்கத்தான் கீரை கிராமப்புற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் ஒரு கொடி வகை கீரையாகும்.இந்த கீரையில் வேர் முதல் விதை வரை உள்ள அனைத்தையும் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள்
காது வலி வந்தால் மருத்துவரை அணுகி காது வலிக்கு மருந்துகளை வாங்கி காதில் விட்டு வருவோம் ஆனால் அந்த மருந்து தீர்ந்த பிறகு மீண்டும் காது வலி ஏற்பட்டு விடும் அப்பொழுது நாம் மறுபடியும் மருத்துவர் அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இனிமேல் உங்களுக்கு இந்த சூழ்நிலை எல்லாம் ஏற்படாது முடக்கத்தான் கீரையை மிதமான சூட்டில் நன்றாக வதக்கி அதில் வரும் சாறை எடுத்து வலிக்கும் காதில் விட்டால் காது வலி சரியாகிவிடும்.
கர்ப்பமாக இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து கர்ப்பமாக இருப்பவர்களுக்கு அடிவயிற்றில் பூசுவதன் மூலம் சுகப்பிரசவம் நடக்கும்.குழந்தை பெற்றோராக இருந்தால் குழந்தை பிறந்த பிறகு முடக்கத்தான் கீரையை அரைத்து அதை அடி வயிற்றில் பூசுவதன் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
தீராத தலைவலி, சளி இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து விட்டு பிறகு அதில் ஆவி பிடித்தால் தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் குணமாகும். அது மட்டுமல்லாமல் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள் உணவில் தினமும் முடக்கத்தான் கீரை சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஏற்படாது அப்பொழுது முடக்கத்தான் கீரையை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் சரியான முறையில் நடக்கும்.
தலையில் மூடி கொட்டுவதை விட தலையில் இருக்கும் பொடுகு தொல்லை தான் பெரும் தொல்லையாக இருக்கிறது அந்த தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு பல ரசாயன கலந்த ஷாம்புகளை நாம் பயன்படுத்தி வருவோம் அப்படியும் பொடுகு போகாமல் இருந்தால் முடக்கத்தான் கீரையை தினந்தோறும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து தலையில் தேச்சு வருவதன் மூலம் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
மூட்டு வலி இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயுடன் சேர்த்து வலி இருக்கும் பகுதியில் தேச்சு வருவதன் மூலம் மூட்டு வலி படிப்படியாக குறைந்து விடும்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.