நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா ரம்யா கிருஷ்ணன் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான காவலா தமன்னா நடனத்தில் வெளியாகி இன்று நடைபெறும் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என படகுழு அறிவித்திருந்தது.ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜெயிலர் படம் வெளியீட்டுக்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக ஒரு மாதம் காலமே உள்ளதால் இதனிடையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இலங்கை வழியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரஜினிகாந்த் வரவேற்றனர். அதற்கான புகைப்படத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.இத்தனை வயதாகியும் படங்களை நடிப்பது நிறுத்தாமல் பிசியாக இருக்கும் ரஜினிகாந்தின் இந்த சுற்றுலா புகைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.